ஒசூரில் விவரணப் படவிழா
செப்டம்பர் 10, 2004
ஒசூரில் விவரணப் படவிழா
ஒசூரில் நாளையும், நாளை மறுநாளும் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி சார்பில் விவரணப் பட விழா நடக்கிறது.
மாநகரங்களில் மட்டுமே திரையிடப்பட்டு வந்த விவரணப் படங்கள் (documentary films) தற்போது சிறுநகரங்களிலும் அவ்வப்போது திரையிடப்பட்டு வருகின்றன. நகர்வாழ் மக்களுக்கு ஏதேனும் ஒரு வழியில்நல்லதைச் செய்வதிலும், நல்லவனவற்றை அறிமுகப்படுத்திவதிலும் சமூல நல அமைப்புகள் முன்னிலும் தீவிரமாகஇப்போது இயங்குகின்றன.
அத்தகைய அமைப்புகளில் ஒன்றாக விளங்கி வரும் ஒசூர் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி, ஹிமால் அசோசியேசன்,நேபாளம் அமைப்புடன் இணைந்து ஒசூரில் விவரணப் படவிழாவை நடத்துகிறது.
ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இயக்குநர்களின் 15 விவரணப் படங்கள்திரையிடப்படவிருக்கின்றன.
நாளையும் நாளை மறுநாளும் மொத்தம் 13 மணி நேரம் இந்தப் படங்கள் திரையிடப்படுகின்றன. உயிரினங்கள்வாழ இயற்கை பக்குவப்படுத்திக் கொடுத்திருக்கும் இப் பூமியை தனக்கேயானதாக ஆக்கிரமிக்கத் தொடங்கியமனிதன் நாளடைவில் தனது சுயநலத்திற்காக சக மனிதனையும் நசுக்கும் அவலத்தை வலிபீற விவரிக்கின்றன இப்படங்கள்.
விழாவினை இந்தியத் திரைப்பட சங்கங்கள் கூட்டமைப்பின் தென்மண்டலத் துணைத் தலைவர் நரஹரிராவ்துவக்கி வைக்கிறார். கூட்டமைப்பின் தென்மண்டலச் செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகிக்கிறார்.
பிரபல திரை விமர்சகர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி விழாவை உடனிருந்து நெறிப்படுத்தவும், உரையாடவும்செய்கிறார்.
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications