விழுச்செல்வம்
கல் என்னும் வினையடியினின்று பிறந்ததே தொழிற்பெயராகிய கல்வி (கல்+வி) எனுஞ்சொல். கல் என்றாலேதோண்டு என்றும் பொருள். தோண்டி எடுக்கப்படுவது என்னும் பொருளில்தான் கற்றல் எனுஞ்சொல்லும்அமைந்துள்ளது. கல்வி என்றால் ஆராய்ந்தறி என்று பொருள் கொள்ளவேண்டும்.
உலகமயமாகியிருக்கும் இந்தக் கணினி யுகத்தில் மல்ட்டிமீடியாவின் உதவியுடன் கல்வியின் நிலை பரந்துவிரிந்துபிரம்மாண்டமடைகின்றது. இன்றைய சந்ததியினருக்கு அறிவுக்குத் தகுந்த தீனிகிடைப்பதால் அவர்களிடையேபொது அறிவு அதிகமாக இருக்கிறது. விரல் சொடுக்கில் உலக விவரங்கள் அனைத்தும் கண்முன்னே விரிவதுஅறிதலை விரைவாக்குகிறது என்பதில் ஐயமில்லை. இப்போதெல்லாம் சிறார்களுக்குக் கற்கவேகற்பிக்கவேண்டியுள்ளது.
கற்க அறிந்தால், பிறகு அவனே தோண்டிக்/தேடிக்கொள்வான், ஆழமாயும் அகலமாயும் அவனவன்ஆர்வத்தைப்பொருத்து, ஈடுபாட்டைப்பொருத்து. உலகளவில் பொதுவாகப் பார்த்தால், வேலை கிடைக்கக்கூடியகல்வி விரும்பப்பட்டாலும் கூட சமீபகாலங்களில் சிந்தனைத் திறன் வளர்க்கும் கல்வித் திட்டமே அறிஞர்களாலும்ஆர்வலர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது.
முற்காலத்தில் அலங்காரப் பொருளாக மதிக்கப்பட்டிருந்த கல்வி பின்பு பொருளாதார வளர்ச்சிக்கான கருவியாகமாறியது. இ-ப்பொழுதெல்லாம் கல்வியே resource கவும் கல்வியே செல்வமாகவும் மாறி விட்டது கண்கூடு.கணினித் துறையில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை கல்வியறிவு இ-ரட்டிக்கிறது என்றும் மற்ற தொழில்துறைகளிலோ ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் அறிவு இரட்டிக்கிறது என்றும்ஆராய்ந்தறிப்பட்டுள்ளது.
கல்வியறிவு இந்தியாவில் சராசரியாக மக்கள்தொகையில் 58%, ஓமானில் 72%, சிங்கப்பூரில் 92.5 % மற்றும்யூகேயில் 100% என்று யுனெஸ்கோ நிறுவனம் கணக்கிட்டுள்ளது. ஒரு மாணவன் சராசரியாகச் செய்யும்செலவையும் கணக்கிட்டிருக்கிறார்கள். (is the public current spending on education divided by the totalnumber of students in that level, as a % of gross domestic product (GDP) per capita). இதன்படிஇந்தியா- 8.4 %(தொடக்கநிலை) 16.4% (உயர்நிலை) 92.5% (பல்கலை ) , ஓமான் - 8.2 %(தொடக்கநிலை) 16.4%(உயர்நிலை) 30.1 %(பல்கலை), சிங்கப்பூர் -12.4 %(உயர்நிலை) 41.5 %(பல்கலை) யூகே - 17.2 %( தொடக்கநிலை)20.1% (உயர்நிலை) 39.9%(பல்கலை) என்ற நிலையில் இருக்கின்றன. இந்த ஆய்வில் இந்திய நாட்டின்பல்கலைக்கல்விச்செலவு தான் மிக அதிகம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஆசிய நாடுகளில் தாய்லந்து, இலங்கை தவிர மங்கோலியாவில் தான் சராசரிக் கல்வியறிவு அதிகம் என்றால் நம்பமுடிகிறதா உங்களால். 90 விழுக்காட்டுக்கும் அதிகம் என்று புள்ளி விவரம் காட்டுகிறது. இந்தோனிசியா மற்றும்சீனா போன்ற நாடுகள் 70%க்கும் அதிகமாக இரண்டாவது நிலையிலும் இந்தியா, மலேசியா போன்ற நாடுகள் 50%க்கும் 69%க்கும் இடையிலும் இருக்கின்றன. பூடான், நேபால், பாகிஸ்தான் போன்ற நாடுகள் 50% க்கும் கீழேஇருக்கின்றன.
அரபு நாடுகளில் கிட்டத்தட்ட 30 மில்லியன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் இருக்கிறார்கள். 8மில்லியன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் இருக்கவேண்டியவர்கள் பள்ளியில் இல்லை என்ற நிலை.வட்டாரத்திலேயே ஈராக்கில் தான் தொடக்கநிலை மாணவர்கள் கிட்டத்தட்ட 100% சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் 1951 ம் வருடம் 18.33% மட்டுமே இருந்த கல்வியறிவு 2001 ம் வருடம் மூன்று மடங்கிற்கும் மேல்அதிகரித்துள்ளது.
இந்தியக்கல்வியில் ஸ்டேட்போர்ட், மெட்ரிகுலேஷன், சீ.பீ.எஸ்.ஈ என்று ஏகப்பட்ட வெரைட்டி உண்டு. படிக்கும்மாணவன் கார்பரேஷன் ஸ்கூலிலும் படிக்கவே செய்கிறான் என்பது சமீபகாலங்களில் நிரூபிக்கப்பட்டுவருகிறது.இந்தியக்கல்வி முறையில் சிற்சில குறைபாடுகள் இருந்தாலும் பொதுவாய் மெச்சும்படியே இருக்கிறது என்பதைவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
யூகேயில் 2002 ம் வருடம் அரசாங்கம் கல்விதிட்டங்களில் மாற்றம் கொண்டுவர நினைத்தது. அதற்குமாணவர்களையே ஆலோசனைக்கு அழைத்தது. 120 மாணவர்கள் பலதரப்பட்ட பள்ளிகளிலிருந்துகல்வித்திட்டங்களில் நிலவிய குறைகளைச் சுட்டிக்காட்ட அழைக்கப் பட்டனர். மாறிவரும் உலகச்சூழலுக்கேற்றவாறு உயர் நிலை மாணவர்கள் முதன்முதலில் இதில் ஈடுபட்டு தங்கள் குரலை உயர்த்தினர்.அம்மாணவர்கள்தங்கள் அனுபவங்களின் வழி மாற்றங்களைப் பரிந்துரைத்தனர். மாற்றங்களை அமைக்கும் போது அரசாங்கம்அப்பரிந்துரைகளை மனதில் கொண்டு அமைத்தது. Save The Children UK என்று இத்திட்டம்பெயரிடப்பட்டது.
ஒவ்வொரு விஷயத்திலும், அதிலும் கல்வித்திட்டங்களில் சிங்கை அரசாங்கம் கீழை நாடுகளிலிருந்தும் மேலைநாடுகளிலிருந்தும் உள்ள சிறப்பான கூறுகளை எடுத்துத் தன் மாணவச் சமூகத்துக்கு அளிக்கிறது. சமீபகாலங்களில்நிறைய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, மாணவர்களைத் தரம் பிரிக்கும்வழக்கத்தை குடிமக்கள் எதிர்த்துக் குரல் கொடுத்ததும் அது தளர்த்தப்பட்டு வருகிறது. சமீப காலங்களில்கல்வியமைச்சு குடிமக்களின் கருத்துக்களுக்கு முன்பை விட அதிகம் செவிசாய்க்கிறது. ஆராய்ந்து மாற்றங்கள்ஏற்படுத்துகிறது. திட்டங்களும் மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதில் மிகுந்த துரிதம் காட்டுகிறது.
இந்திய மாணவர்களுக்கும் சிங்கை மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் ஆச்சரியத்தக்க ஒற்றுமைஒன்று உண்டு. உளைச்சலும் அழுத்தமுமே அவை. அவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகள் சிறப்பாகச்செய்யவேண்டுமே என்று மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் கல்வி குறிக்கோளை அடையும் ஒரு வழிதானேயன்றி, அதே ஒரு குறிக்கோள் அல்ல என்பதனை உணரத் தவறுகிறார்கள்.
கற்பிக்கும் ஆசிரியரும் ஒரு மனிதர் தானே! அவராலும் திறம்பட எத்தனை மாணவர்களைச் சமாளிக்கவும்கற்பிக்கவும் முடியும்? சராசரியாக ஓர் ஆசிரியருக்கு இத்தனை மாணவர்கள் என்ற விகிதத்தில் வகுப்பின் அளவையுனெஸ்கோ நிறுவனம் கணக்கெடுத்திருக்கிறது. அதில் இந்தியா -72 மாணவர்களையும், ஓமான் மற்றும் சிங்கப்பூர்25 மாணவர்களையும், பிரிட்டிஷ் வகுப்பு 19 மாணவர்களையும் நடைமுறையில் கொண்டுள்ளது தெரிகிறது.
-இது ஒரு அறிவியல் தொழில்நுட்ப யுகமும் கூட. அறிவியல் மிக வேகமாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது.இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் தொழில்களுக்குத் தேவையான தொழில்நுட்பத்தை 50% பங்குவெளிநாட்டிலிருந்து கடன் வாங்கப்படுகிறது. 45% பங்கு கடன் வாங்கி தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்வது அறிந்ததே. இதில் 0.5% மட்டுமே ஆய்வுகளின் பங்கு. எதிர்காலத்தில் நாடுகளுக்கிடையேதொழில்ரீதியான போட்டி அதிகரிக்கும் பொழுது,புதிய தொழில்நுட்பத்தைக் கடன் தர மாட்டார்கள்.தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இ-ப்பொழுது இந்தியக் கல்வி நிறுவனத்திலிருக்கும் ஆய்வுமிகவும் குறைவு.
பள்ளிக்கூடங்களிடையே இந்தியாவில் நிலவும் வேறுபாடுகளை மற்ற நாடுகளில் பார்க்க முடிவதில்லை.இந்தியப்பள்ளியில் பாடதிட்டங்கள் விலாவாரியாக இருக்கின்றன. ஆங்கிலப்பாடத்தில் அடித்தளத்திலிருந்துஆரம்பித்து அழகாகச் சொல்லிக்கொடுக்கிறார்கள்.பொதுவாய் இந்தியாவில் மாணவர்களுக்குப் பாடங்களைஆழமாயும் அகலமாயும் தயாராய்க் கொடுக்கிறார்கள். சிங்கப்பூரில் பாடங்களில் புள்ளி வைத்திருக்கும்,மாணவர்களே கோலம் போட்டுக்கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட எல்லாப்பாடங்களுக்கும் பொதுவாய் இதேநிலை தான். இதனால், திணறும் மாணவர்களும் உளர் என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியாவில் பொதுவாகஅப்படியில்லை.
கற்பித்தல் இந்தியாவில் சிறப்பாகவே இருக்கிறது. சமூகவியல் மற்றும் தமிழ்ப்பாடங்களை அளவிலும் ஆழத்திலும்ஒப்பிட்டுப்பார்த்தால், இந்தியாவிற்கும் சிங்கைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். சிங்கைத்தமிழ்ப்பாடத்திட்டத்தில், தொடக்க நிலையில் இருக்கும் சொற்ப செய்யுளும் பழமொழியும் கூட உயர் நிலையில்இல்லையாதலால், தமிழ்பாடம் கிட்டத்தட்ட நீர்த்துப்போன நிலையில் தான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.மேலும், தமிழ் கற்பித்தலில் நிறைய முன்னேற்றம் தேவையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொதுவாகதமிழாசிரியர்கள் மாற்றங்களைச் சந்திக்கும் முனைப்பில் மொழியில் தங்களை மேம்படுத்திக் கொள்ளத்தவறுகிறார்கள்.
இந்தியாவில் சோஷியல் ஸ்டடீஸ் ஸிலபஸ் அளவில் அதிகம். புரிந்துகொண்டு ஓரளவு மனனம் செய்தால்தேர்வில் சிறப்பாகச் செய்து விடலாம். ஆனால், ஆராய்ந்தறியும் திறனை சோஷியல் ஸ்டடீஸிலும் பின்பற்றுகிறதுகல்வியமைச்சு சிங்கையில். சமூகவியலில் பெரும்பாலும் சிங்கப்பூர் மற்றும் கிழக்காசிய நாடுகளின்பூகோளமே/சரித்திரமே தொடக்க/உயர் நிலைக் கல்வியில் கவனம் பெறுகிறது. பாடங்களைப்படித்து அதைஉபயோகித்து தேர்வில் கொடுக்கப்படும் பூகோள/வரலாற்றுப் படம்/உரை/செய்தி போன்றவற்றை ஆராயத்தெரியவேண்டும்.
பின் கொடுக்கப்பட்ட கேள்விகளை அணுகி விடையளிக்க வேண்டும்.கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திட்டத்தைசிங்கப்பூர் அமைச்சு (thinking skills) மாணவன் தானே யோசிக்கும் திறனை வளர்க்கும்படி அமைத்துள்ளது.தொடக்க நிலை மாணவன் முழுக்க முழுக்க ஆராய்ந்தறியும் (analytical /thinking skills) திறனிலேயேசோதிக்கப்படுகிறான். தேர்வுத் தாளில் அவன் முற்றிலும் அது வரை பார்த்திராத புதிய கேள்விகளையே(application-oriented) எதிர் நோக்குகிறான்.
சிங்கப்பூரில் ஆங்கிலப்பாடத்திட்டம் இந்தியாவைப்போல ஒரு வரையரையுடன் இல்லை. இங்குபொதுப்படையான அணுகுமுறையே நிலவுகிறது. மாணவர்கள் அதிகம் தாங்களே பரவலாகப்படித்துத் தங்கள்மொழிவளத்தைப் பெறுக்கிக் கொள்ளவேண்டியுள்ளது. வாசிப்புக் கழகம் (reading/English club) தொடக்கப்பள்ளியிலிருந்தே அமைக்கப்படுகிறது. நாளிதழ்/செய்தி/புத்தகம் வாசித்து மாணவன் அதனைப்பற்றிய திறனாய்வுஒன்றை ஒப்படைப்பான். இதன் மூலம் அவனுடைய வாசிப்பு விலாசமடைந்து பொது அறிவுடன் மொழியறிவும்பெறுகுகிறது.இம்முறை முன்பு மேலை நாடுகளில் அறிமுகமானவுடன் சிங்கப்பூர் பின்பற்ற ஆரம்பித்துவிட்டது.பொதுவாகவே பாடதிட்டங்களையும் விரைவாக அறிமுகப்படுத்துவதில் சிங்கையில் அரசாங்கம்மெச்சும்படியிருக்கிறது. மற்ற மேலை நாடுகளைப்போலவே இருந்தாலும் கூட நாடகம் (threatre/drama) வழிஆங்கிலம் கற்பிக்கும் முறை இங்கு அறிமுகக் கட்டத்திலேயே இருக்கிறது. இன்னும் அதிக பிரபலம்அடையவில்லை.
இந்தியாவில் கல்விக்கு 1999--2000 வருடத்தில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ 409,99,74,000.00. ஆனால்,செலவழிக்கப்பட்டதோ ரூ 349,09,11,000.00 தான். 2000--2001 வருடத்தில் ஒதுக்கிய தொகை ரூ419,57,16,000.00. செலவின் விவரம் இல்லை.
-கடந்த வருட ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கலைத் துறையில் 40 சதவீத மாணவர்களும்அறிவியல் துறையில் 20 சதவீத மாணவர்களும் வணிகத் துறையில் 1.1 சதவீத மாணவர்களும் கால்நடைஅறிவியல் துறையில் 0.3 சதவீத மாணவர்களும் வேளாண்மைத் துறையில் 1.1 சதவீத மாணவர்களும் படித்துவருகிறார்கள். விவசாய நாடு என்று அழைக்கப்படும் இந்தியநாட்டில் வேளாண்மை, கால் நடைத் துறையில் கல்விபெறுபவர்கள் இவ்வளவு சிறிய சதவீபதத்தில் இ-ருப்பது முரண்பாடு தான். வேளாண்மை பற்றிய பல தகவல்கள்உழுபவர்களை சென்றடையாமலே போய் விடுகிறது. இ-து போன்ற குறையை எல்லாத் துறையிலும் சுட்டலாம்.
ஆங்கிலேய ஆட்சியின் போது 1857--ல் லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து கல்லூரி இணைப்பு முறையைப்பின்பற்றி உயர்கல்வி முறை தொடங்கப்பட்டது இந்தியத் துணைக்கண்டத்தில். லண்டன் பல்கலைக்கழகமேஇ-ம்முறையைக் கைவிட்டு விட்ட பின்னரும் இ-ன்னும் பழைய முறையே பின்பற்றப்பட்டு வருகிறது இந்தியாவில்.இ-தனால் ஏற்படும் பாதகங்கள் பலதரப்பட்டவை.
கல்வி என்ற நாணயத்தின் மறுபக்கம் ஆசிரியர்கள். இந்தியாவில் 3 1/4 லட்சம் கல்லூரி ஆசிரியர்கள்இருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் முழுமையான கல்வியாளர்களாய் இருக்கிறார்கள் என்பதில் ஐயப்பாடுஉண்டு. டுடோரியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் - இவர்களுக்கும் வித்தியாசம் என்னவென்றே புரியாத நிலை.மேலும் முழுமையான கல்வியாளர்களின் பணியில் கல்வி ஒரு புறமும், ஆய்வு ஒரு புறமும் சாதாரணமாக இருக்கும்மற்ற வளர்ந்த/வளரும் நாடுகளில். ஆனால், இந்தியாவில் கல்லூரி ஆசிரியர்களில் பெரும்பாலோர் ஆய்வுசெய்வதில்லை. ஆசிரியர்கள் டுடோரியல் ஆசிரியர்களாய் மாறி விட்ட அவலம் நிலவுகிறது. கல்லூரிஇ-ணைப்புமுறை ஒழிந்தால்தான் உயர்கல்வியின் தரம் உயரும். மிகப் பெரும்பாலான ஆசிரியர்களுக்குபாடத்திட்டம் வகுப்பதில், மாணவர்களைச் சேர்ப்பதில், கேள்வித் தாள்கள் நிர்ணயிப்பதில், விடைத் தாள்களைத்திருத்துவதில், விளைவுகளை அறிவிப்பதில் பங்கில்லை என்பது வருந்தத்தக்கதே. பொது நிலவரம் இது.
பள்ளியில் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் ரேங்க் போலவே யுனெஸ்கோ கல்வியின் தராதரத்தைப் பொருத்துவரிசைப்படுத்தியுள்ளது. முதலிடம் நார்வே நாட்டுக்கு ! யூகே 13 வது இடத்தையும், ஓமான் 79 வது இடத்தையும்,சிங்கப்பூர் 28வது இடத்தையும், இந்தியா 127 வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
கல்வியை ஒரு மனிதனை மேம்படுத்தி, குடிமகனை உருவாக்குதல், என்று வரையறுக்கிறது சிங்கப்பூரின் கல்விஅமைச்சு. இங்கு 98% ஒரே சானல் வழியாக, அதாவது கல்வியமைச்சின் வழியாகவே ஒவ்வொரு செயலும்நடக்கும். குறுக்கு வழியையெல்லாம் இங்கு நினைத்தும் பார்க்க முடியாது. எல்லாக்கட்ட கல்வியிலும் அட்மிஷன்அந்தந்த மாணவனின் தேர்வுமுடிவுகளைப் பொருத்துத் தான் அமையும். இந்தியாவில் உள்ளது போன்றுமானேஜ்மெண்ட் கோட்டாவோ, காசுகொடுத்து வாங்கும் சீட்டோ இங்கு இல்லை.
குழந்தையின் ஒழுக்கம், உடல் மற்றும் அறிவை சமூகவுணர்வோடு வளர்ப்பதே அமைச்சின் குறிக்கோள். வீடும்பள்ளியுடன் சேர்ந்து விழுமியங்களை குழந்தையின் பிஞ்சு மனதில் பதிய வைக்கின்றது. இதிலிருந்து வாழ்க்கையைஎதிர்நோக்கித் தன் குறிக்கோள்களை அடைய உதவுவதே தலையாய பணி. கல்வி, தனக்கு, குடும்பத்திற்கு,வீட்டிற்கு, சமூகத்திற்கு மற்றும் நாட்டிற்கு ஒருவன் பொறுப்புள்ளவன் என்பதனை உணரச்செய்வது, என்றுஅமைச்சு நம்புகிறது. சமீபத்தில் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மாணவன் என்ன கற்கிறான் என்பதை விடஎப்படிக் கற்கிறான் என்பதே வலியுறுத்தப்படும் என்று கூறியது.
பாலர் பள்ளிகளில் எழுத்துக்களும், பாடல்களும் விளையாட்டுக்களுமே அதிகம். ஆனால், இங்கேயேகுழந்தைகளுக்கு கணினி அறிமுகப்படுத்தப்படுகிறது, விளையாடவும் படிக்கவும். பாலர்பள்ளியில் படிக்காதகுழந்தைகளும் சிங்கப்பூரில் உண்டு. ஆறு வயது முதல் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் ஆறு வருடம் பயில்வர்.ஜனவரி முதல் தேதியில் ஆறு வயது முடிந்திருக்க வேண்டும். ஒரு நாள் குறைவாக இருந்தாலும் கூட சேரமுடியாது.2003 வருடம் கட்டாயக்கல்வி சட்டபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கப் பள்ளியில் குழந்தையைச்சேர்க்காத பெற்றோருக்குத் தண்டனை உண்டு.
ஆங்கிலம் பயிற்றுவிக்கும் மொழியாகவும், தாய் மொழி இரண்டாம் மொழியாகவும், இவை தவிர கணிதமும்இரண்டாம் வகுப்பு வரை பயில்கின்றனர். மாணவன் அமைச்சின் கீழ் பயிலும் கல்விக்கூடங்களில் மிகவும் குறைந்தமாதச் சம்பளமே கட்டுவான். இங்கிருக்கும் ஒரு சில தனியார் பள்ளிகள் கட்டணம் அதிகம் வசூலிக்கின்றன. சென்றவருடங்களில் இந்தியாவின் புகழ்பெற்ற தில்லி பப்ளிக் ஸ்கூல் மற்றும் செண்ட்ரல் ஸ்கூல் தங்களின் கிளைகளைத்துவங்கியுள்ளனர். இவர்களின் கட்டணம் ஒப்புநோக்கச் சற்று கூடுதலே. இது தவிர மட்ராஸா எனப்படும்இஸ்லாமிய சமயப்பள்ளிகள் மலாய் சமூகத்தினரால் நடத்தப்படுகிறது.
மூன்றாம் வகுப்பில் அறிவியல் அறிமுகமாகிறது. நான்காம் வகுப்பில் சோஷியல் ஸ்டடீஸ் என்னும் சமூகவியல்பயிற்றுவிக்கப்படுகிறது. ஆறு வருடமுமே நற்குடிமக்கள் என்னும் ஒரு பாடம் அவரவர் தாய் மொழியில்மாணவர்கள் பயில்வர். சீனம், மலாய், தமிழ் போன்றவை தவிர சமீப வருடங்களில் ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்திபோன்ற தாய்மொழிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு, அவ்வினக் குழந்தைகளால் படிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சுகாதாரப்பாடம் ஆறு வருடமும் படிப்பர். ஓவியம்/கலை மற்றும் விளையாட்டும் உண்டு. உடற்பருமன்அதிகமோ குறைவோ இருந்தால், பள்ளியில் தகுந்த உடற்பயிற்சிகளைச் செய்ய மாணவர்களை ஊக்குவிப்பர்.ஆறுமாதத்திற்கொரு முறை பற்கள் பள்ளியிலேயே சோதிக்கப்பட்டுத் தேவையானால், தகுந்த பரிந்துரைகள்கொடுக்கப்படும். இதுமட்டுமல்லாது, முதலாம் மற்றும் ஆறாம் வகுப்பில் தடுப்பூசியும் பள்ளியிலேயே சுகாதாரஅமைச்சு ஏற்பாடு செய்து போடுகிறது.
இந்த வருடம் (2004 மார்ச்) முதல் தொடக்கநிலை நான்கில் செய்யப்படும் வடிகட்டல் கொஞ்சம் தளர்த்திமாற்றப்படுகிறது. அதாவது மூன்றாகப் பிரிப்பதற்கு பதில் இரண்டாகப்பிரிக்கிறார்கள் மாணவர்களை, சிறப்பாகச்செய்பவர்கள், திறன்குறைந்தோர் என்று. தொடக்கப்பள்ளி இறுதியாண்டு (மாணவனின் 12ம் வயதில்)பொதுத்தேர்வு நடக்கும். இது அமைச்சு ஏற்பாடு செய்யும் தேர்வு ஆகும். இதில், ஆங்கிலம், கணிதம், தாய் மொழிமற்றும் அறிவியல் தேர்வுகள் உண்டு. ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில், தேர்வுத் தாள் தவிர வாய்மொழிப்பாடம்மற்றும் கேட்டல் கருத்தறிதல் ஆகியவையும் அடங்கும்.
இதற்குப்பிறகு, அவன் உயர்நிலைப்பள்ளிக்குப் போவான். மதிப்பெண்களைப் பள்ளிகளில் மாணவர்களுக்குஇடமொத்துக்கும் அமைச்சு. இங்கு உயர்நிலை மூன்று மற்றும் நான்கிலேயே மாணவர்கள் சயன்ஸ் அல்லதுஆர்ட்ஸ் க்ரூப்பில் படிப்பர். அங்கு நான்கு வருடங்களில் ஓ லெவெல் எனப்படும் லண்டனின் கேம்பிரிட்ஜ்தேர்வை முடித்து தொடக்கக்கல்லூரிக்குள் நுழைவான். இரண்டு வருடங்களில் ஏ லெவெல் முடித்ததும்பல்கலைக்கழகத்தில் சேர்வான். ஒவ்வொரு நிலையிலும் வடிகட்டி வடிகட்டியே அடுத்தநிலைக்கு மாணவமணிகள்அனுப்பப்படுகிறார்கள்.
ஓ லெவெல் மற்றும் ஏ லெவெல் ஆகியவற்றில் இங்கிலந்து மாணவர்களை விட மிகச்சிறப்பாக சிங்கை மாணவர்கள்செய்வதாகக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்த வருடம் முதல் ஓ லெவெல் எழுதாமல், நேராக ஏ லெவெல்எழுதும் முறையும் அறிமுகமாகிறது. ஓமானில் பதினோரு வருடத்தில் பல்கலைக்கழகங்களில் சேரலாம்;சிங்கப்பூரில் இதற்குப் பன்னிரெண்டு வருடமெடுக்கும். சிங்கையில் பல்கலைக்கழகங்கள் மூன்றும்இவ்வருடத்திலிருந்து (2004) அட்மிஷனைத் தனித்தனியே செய்யப்போகின்றன. முன்பெல்லாம் சேர்த்து ஒரேவிண்ணப்பம் இருந்தது. புறப்பாட நடவடிக்கைகளுக்குப் புள்ளிகள் உண்டு. அது அடுத்தகட்டக் கல்விக்குமாணவனின் தேர்வுமதிப்பெண்களுடன் சேர்த்து மதிப்பிடப்படுகிறது. பள்ளிகளில் ஒழுக்கப்பாடமும் (Moraleducation) உண்டு. காலையில் கட்டாய வாசிப்பு நேரமும் ஒதுக்கப்படுகிறது. கண்களுக்கு இதமளிக்கும்பயிற்சிகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. சார்ஸ் வந்தபோது அமைச்சே மாணவர்களுக்கு வெப்பமானிகளை(thermometers) வழங்கி தினமும் காய்ச்சல் இருக்கிறதா என்று சோதித்தறிய ஊக்குவித்தது.
ஓமானில் குடிமக்களுக்குக் கல்வி இலவசம். சிங்கையில் கல்விக்கட்டணம் வெளிநாட்டு மாணவர்களைவிடக்குடிமக்களுக்கு மிகவும் குறைவு. ஓமான் பல்கலைக்கழகங்களில் சேர பெண்கள் 90--95% வாங்க வேண்டும்.ஆண்கள் 70--75% வாங்கினாலே போதுமானது. அதற்கு அங்கு கொடுக்கப்படும் ஆணே பொருளீட்டும் குடும்பத்தலைவன் என்னும் காரணம் நியாயமானதாகவே இருந்தாலும் கூட, அந்தப் பாரபட்சமெல்லாம் சிங்கப்பூரில்கிடையாது.
ஆணானாலும் பெண்ணானாலும் நன்கு படித்தால் மேலும் மேலும் படிக்கலாம். ஓமானில் உள்ள சில தனியார்பள்ளிகளைத் தவிர மற்ற அரசாங்கப்பள்ளிகளில் பயிற்றுமொழியே அரபிக் தான். ஆசிரியர்கள் பெரும்பாலும்எகிப்திர்கள், மொரோக்கொவினர் மற்றும் துனிசியர்கள் ஆவர். ஆங்கிலம் அந்நிய மொழியாகவே கருதப்படுகிறதுஎன்றாலும் கூட அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு ஆசியர்கள் குறிப்பாக இந்தியர்கள், இலங்கையினர்ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தியப் பள்ளிகள் உண்டு. இங்கு இந்திய மாணவர்கள் தாய்நாட்டில்படிப்பதைப்போலவே படிக்கிறார்கள். ஓமானில் வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதும் பெரும்பாலும் ஆண்களே.அரசாங்கமே அனுப்பிப் படிக்க வைக்கிறது. பெரும்பாலும் பெண்கள் ஆசிரியர்களாகவும் தாதியர்களாகவும்உருவாகின்றனர். வட்டார நாடுகளில் வேலை கிடைப்பது இவர்களுக்குச் சிரமமில்லை.
பிரிடிஷ் பள்ளிகளில் பாடத்திட்டம் கிட்டத்தட்ட சிங்கப்பூரை ஒத்திருக்கின்றது. பாலர்பள்ளிகளை உள்ளூர் கல்விஇலாக்கா நடத்துகின்றது. பள்ளிகளில் முதலில் நாட்டுக்குடிமக்களுக்கும் பிறகு வெளிநாட்டினருக்கும் இடம்ஒதுக்கப்படும். அகதிகளின் குழந்தைகளுக்கு இடம் கிடைப்பது சிரமமில்லை. பிறக்கும் போதே குழந்தைகளுக்குபள்ளியில் இடம் பிடிக்கும் வழக்கம் இங்குண்டு. தொடக்கப்பள்ளி இறுதியாண்டான ஆறாம் வகுப்பில் இங்குசிறப்புத் தேர்வுண்டு. சிங்கப்பூரைப்போலவே உயர்நிலைக்கல்வியை முடித்ததும் தொழிற்கல்வி நிலையங்களுக்குப்போகும் மாணவர்களும் உண்டு. மற்றபடி ஏ லெவெல் முடித்ததும் பல்கலைக்கழகம் செல்வர்.
யூகே போன்ற முன்னேறிய நாடுகளில் 10-வது வரை ஓ லெவல் என்றும், அதற்குப் பின் ஏ லெவல் என்றும் அல்லதுஇ-வற்றிற்கு இ-ணையான வகையில் கல்வியைப் பிரித்திருக்கிறார்கள். ஓ லெவல் வரை பள்ளிகளே மாணவர்களின்பாடத் திட்டத்தைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. ஏ லெவலில் மாணவர்கள் தம் விருப்பப்படிப் பாடங்களைத்தேர்வு செய்து கொள்ளலாம்.அங்குள்ள இ-ந்த நடை முறை Credit System என்றழைக்கப்படுகிறது.இந்தியாவைப் போல எண்களில் முடிவுகள் கொடுக்கப்படுவதில்லை. சிங்கப்பூரைப்போல க்ரேட்ஸ் (grades)தான்.
தொடக்கல்வியிலிருந்தே ஒப்படைப்புத் திட்டம் (project work) எல்லாப் பாடங்களுக்கும் இருக்கின்றன.வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு. பாட சம்பந்தமான ஆய்வை மாணவர்கள் தனியாகவோ குழுக்களாகவோசெய்கிறார்கள். இதற்கு கணினி இணையம் மட்டுமில்லாமல் புத்தகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதுசிங்கப்பூர், யூகே போன்ற நாடுகளில் பிரபலமான அளவிற்கு இன்னும் இந்தியாவில் ஆகவில்லை.
சிங்கப்பூரில் மூன்று பல்கலைக்கழகங்கள் உண்டு. இந்தியாவில் ஏராளமான பல்கலைக்கழகங்களும் துறைகளும்உள்ளன. ஓமான் சிங்கப்பூர் இரண்டையும் விட இந்தியாவில் உயிரியல் துறை சிறப்பாகவே இருக்கிறது. பிரிடிஷ்பல்கலை மருத்துவத்திற்கு அதிகம் பேர்போனது. இந்தியாவின் ஐஐடி போன்ற கல்விக்கூடங்கள் உலகளவில்அங்கீகரிக்கப்படுவது அறிந்ததே.
சிங்கப்பூர் மக்கள் தொகையை(41,85,000) ஒப்பிடும் போது பட்டதாரிகள் அதிகம் தான். மொத்தமாய் சென்றவருடம் 29,012 பட்டதாரிகள் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இதில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் 2,160 பேர்.தொழில்நுட்பத்தில் (polytechnic) 16,640 பேர் பட்டம் பெற்றுள்ளனர். பொறியாளர்கள் மற்றும்மருத்துவர்களையும் சேர்த்து பல்கலைப்பட்டதாரிகள் 10212 பேர். ஆய்வு செய்பவர்கள் 89%, ஆய்வுப்பொறியாளர்கள் 39%, ப்ரோஜெக்ட் ாபீஸர்கள் 28%, மருத்துவத்தில் முதுகலை படிப்பவர் 15%, மற்றவர்கள் 7%அடங்குவர்.
முன்னேறிய நாடுகளில் செமஸ்டர் முறை கடைபிடிக்கப்படுகிறது. ஏறத்தாழ மாதத்திற்கொரு முறை வகுப்புத் தேர்வுநடக்கிறது. ஆறாவது மாதத்தில் கடைசித் தேர்வு. மாணவர்கள் வருடம் முழுவதும் படிக்க வேண்டும். இ-ளநிலைவகுப்புகளில் B.A., B.S. என்று பொதுவான பட்டங்கள்தான் உண்டு. மாணவரின் கல்வியறிவு பற்றிய விபரத்தைஅவர் எடுத்திருக்கும் பாடங்களின் பட்டியலில் இ-ருந்து ஒருவர் முடிவு செய்து கொள்ளலாம். இந்தியாவைப்போன்று ஏதேனும் துறையில் தான் பட்டம் பெறமுடியும் என்ற நிலை அங்கெல்லாம் கிடையாது. இருந்தபோதிலும்கூட பள்ளிக்கல்வி (+2) வரை இந்தியாவில் கல்வி முறை சிறப்பு என்பதை மறுக்கவே முடியாது.
அமெரிக்காவிலிருக்கும் ஒரு மாணவன் அந்நாட்டின் ஒரு கோடியிலிருக்கும் பல்கலைக்கழகத்தில் ஓராண்டுபடித்துவிட்டு, அடுத்த ஈராண்டுகள் அடுத்த கோடியிலிருக்கும் இ-ன்னொரு பல்கலைக் கழகத்தில் படிப்பைத் தொடரமுடியும். தான் -இதுவரை எடுத்த Creditகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து தொடர்ந்து மேலேபடிக்க முடியும். இந்திய நாட்டில் உயர் கல்வியைப் பொறுத்தவரை அவ்வாறு ஒரு பல்கலைக்கழகத்திலிருந்துமற்றொன்றுக்குத் தான் படித்த பாடங்களுக்கான அங்கீகாரத்துடன் செல்வதே கடினம்.
கல்வி முறையில் இ-றுக்கம் அதிகம். அங்கு மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்திற்கேற்ப ஆசிரியர்களைத்தேர்ந்தெடுக்கிறார்கள். ஆசிரியர் கிரேடு வழங்கிய பின்னர் யாராலும் அதனை மாற்ற முடியாது. அனுபவமுள்ளஆசிரியர்கள் மேல் மாணவருக்கு அதிருப்தி ஏற்பட்டால் அவர் அந்தப் பாடத்தை விட்டு விட்டு அடுத்தசெமஸ்டரில் வேறொருவரைத் தேர்வு செய்து கொள்ளலாம். இதனால், மாணவர்களிடம் நல்ல பெயர் வாங்கும்சவால் ஆசிரியர்களுக்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. ஆராய்ந்தறியும் திறனுக்கும் நெருக்கடியைச்சமாளிக்கவும் மாணவன் தயாராகத் தயார்படுத்தப்படுகிறான்.
இந்தியாவில் கல்விக்காக நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்கும்படி நீண்ட காலமாகக் கேட்கப்பட்டுவருகிறது. ஆனால், தற்பொழுது 3.9 சதவீதமே செலவழிக்கப்படுகிறது. கணிதமும் கம்ப்யூட்டர் பாடமும் இப்போதுபிரபலமில்லை என்றால் நம்புவீர்களா! இந்தப் பாடங்களைப் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்தவருடங்களில் 6% குறைந்துள்ளது.அமெரிக்காவில் பொறியியல்(127) மற்றும் மானேஜ்மெண்ட் (20%)பாடங்களேமிகவும் விரும்பப்படும் பாடங்கள்.
2002--2003 ம் வருடங்களில் அங்கு 586,323 வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்கள் 74,603 பேர். அதாவது12.7% இந்தியர்கள். எப்போதுமே இந்திய மாணவர்கள் தான் அதிகம் என்றாலும் இது இதுவரையில் இல்லாதஎண்ணிக்கையாம்.
நினைவாற்றலுடன் கூடிய புத்தாக்கம் (creativity) தான் இந்தியர்களின் பெரிய பலம். இது வெளிநாடுகளில்மிளிருகிறது. மேலை நாடுகளில் புத்தாக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மனனம் செய்வதைக் குறையாகக்கருதினார்கள். ஒன்றை விட்டு இன்னொன்று சிறக்க முடியாது. அதனால், கணினிக்கும் இணையத்துக்கும்மாணவர்கள் அடிமையாகும் அபாயம் உருவாகி வருவது மெதுவாகத் தெரியவருகிறது. இதனால், ஒரு சிறியகணக்கைக்கூட மனக்கணக்காகப் போடமுடியாமல் அங்கு சிலர் திணறுகிறார்கள்.
இந்தியாவில் மாணவர்கள் 18வது வயதில்தான் கல்லூரிகளுக்குப் போகிறார்கள். இந்த வயதினரில் ஆறுசதவிகிதம் பேர்தான் கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். இ-து குறைவான எண்ணிக்கை. ஆனால், இ-வர்கள் பெறும்கல்வி சமூகத்திற்குத் தேவையான உற்பத்திகளில் ஈடுபடுவதற்குப் பெரும்பாலும் பொருத்தமான துறைகளில்இ-ல்லை எனக் கூறப்படுகிறது.
இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் தொழிற்கல்விக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.தொழில் சார்ந்த கல்விக்கான வாய்ப்புகள் குறைந்திருப்பதனால், பள்ளிகளில் எட்டாம் வகுப்பு, பத்தாம்வகுப்பிற்குப் பிறகு படிப்பை நிறுத்தி விடுபவர்களிடம் தொழிலைப் பற்றிய ஞானமில்லை.
நமது தொழிலாளர்களில் 8 சதவீதம்தான் organised sector ல் இ-ருக்கிறார்கள். மற்ற 92 சதவீதம் unorganisedபகுதியில் இருக்கிறார்கள். இ-த்தகைய unorganised sector தொழிலாளர்களிடம் திறமை அதிகமில்லை.அதனால் நாட்டின் உற்பத்தி திறன் குறைவாக இ-ருந்து வருகிறது. தொழிலில் ஈடுபடுபவர்கள் தமது தொழில் பற்றியஅறிவை மேலும் வளர்த்துக் கொள்ளப் படிக்க வேண்டியிருக்கிறது. முன்பு கல்வி 21 அல்லது 22 வயதுக்குள் முடிந்துபோன சமாச்சாரமாக இருந்தது. ஆனால், இ-ப்பொழுதோ தொழிலில் ஈடுபட்ட பின்பும் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் எல்லா நாடுகளிலுமே அதிகரித்து வருகிறது. அதனால் 21-ம் நூற்றாண்டில் தொலைநிலைக்கல்வி முறை பெரிதளவு வளரும் போலத் தோன்றுகிறது. மற்ற நாடுகளில் தொழிற்கல்விக்கு வேண்டிய கவனம்கொடுக்கப்படுகிறது.
பள்ளியை விட்டதும் கல்வி முடிவு பெறாது. தொடர்ந்து கற்றபடியே இருந்தால் மட்டுமே மனிதம் சோர்வுராமல்ஓங்கி நிற்கும். வாழ்க்கையே கல்வியாக அமைகிறது ஒரு மனிதனுக்கு. பள்ளிக் கூடம் அந்தக் கல்விப் பயணத்தின்ஒரு பகுதி மட்டுமே என்பதை மறப்பதற்கில்லை. கல்விக்கு ஆதாரங்கள் ஆன்மீகம், அறிவு, உடல் ஆரோக்கியம்மற்றும் விழுமியங்களாகும். நான்கும் சமச்சீராய் அமைதல் வேண்டும். இதில் ஏதாவது ஒரே ஒரு கூற்றிற்கு அதிகமுக்கியத்துவம் கொடுத்தாலும் கல்வியின் குறிக்கோளுக்கு எதிராய் முடியும் ஆபத்து நேரலாம். எந்த ஒருபாடத்திட்டமும் இரண்டு குறிக்கொள்களை மறக்க முடியாது. ஒன்று மனிதம், இன்னொன்று மனிதபலம். சமூகத்திற்குவேண்டிய மனிதபலத்தை மட்டும் உற்பத்தி செய்யாமல் தனி மனிதனை உயர்த்தி, மனிதம் உற்பத்தி செய்து,அதனைத் தொடர்ந்து மனிதபலம் பெறுகினால், கல்விக்கூடங்களின் பணி பொருளுடையதாகும். இதுவே கல்விக்குஇன்று இருக்கும் பெரிய சவால்.
(உலகநாடுகளில் கல்வி என்ற பெயர்மாற்றத்துடன் முதல் பத்திமட்டும் வெட்டப்பட்டு ஜூன் 2004 அமுதசுரபியில்பிரசுரமானது.)
- ஜெயந்தி சங்கர்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications