செம்மொழியின் பெயரால் வடமொழிக்கு வாரி வழங்கும் அரசு
1977ஆம் ஆண்டிலிருந்து கடந்த 27 ஆண்டுகளாக இந்திய அரசின் கல்வித்துறை அதாவது மனித வள மேம்பாட்டுத் துறை செம்மொழி என்றசொல்லாட்சியைப் பயன்படுத்தி வருகிறது. செம்மொழிகளின் வளர்ச்சிக்குரிய நிதியையும் வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் இத்துறையின் சார்பில்வெளியிடப்படும் ஆண்டறிக்கையில் இது பற்றிய விவரங்கள் குறிக்கப்படுகின்றன.
செம்மொழி வளர்ச்சிக்காக இந்திய அரசு என்னென்ன செய்துள்ளது என்பவை பற்றிய விவரங்கள் நடுவண் அரசின் கல்வித்துறையின் ஆண்டறிக்கைகளில்இருந்து எடுக்கப்பட்டு இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
செம்மொழியாக எந்த ஒரு மொழியையும் அரசு அறிவிப்பது, அம்மொழி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கவும், அம்மொழிப் புலமையாளருக்கு விருது வழங்கவும்,இன்னோரன்ன ஊக்க நடைமுறைகளுக்குமாகவே தவிர வேறெதற்காகவுமன்று.
இந்திய நடுவணரசின் கல்வியமைச்சுத்துறை (அதன் இன்றைய வாரிசான மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சு), 1977ஆம் ஆண்டு முதலாகச்செம்மொழிகளின் வளர்ச்சிக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடுகளை ஏற்படுத்தி, அந்த நிதி எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதைத், தனதுஆண்டறிக்கையில் கூறி வருகிறது.
1947இல் நாடு விடுதலை பெற்ற பின்பு வந்த இவ்வமைச்சின் ஆண்டறிக்கைகளில், தொடக்கத்தில் இந்திய ஒன்றிய மொழி என்ற பிரிவு இருந்தது.இந்தியை வளர்க்கவும், மேம்படுத்தவும், வளமாக்கவும் திட்டங்களை வகுத்து இப்பிரிவில் நிதி ஒதுக்கினர். நடுவண் அரசின் கல்வி அமைச்சுத்துறையேஇத்திட்டங்களைச் செயற்படுத்தியது.
இந்தியாவின் மூத்த செவ்வியல் இலக்கியங்களைப் பிறமொழிகளில் மொழி பெயர்க்க, ஐ.நா.வின் கல்வி- அறிவியல்- பண்பாட்டு நிறுவனத்துக்குக்கல்வி அமைச்சு நிதி வழங்கியதையும், 34 மூத்த செவ்வியியல் இந்திய மொழி நூல்களை ஐ.நா. அமைப்புக்கு அமைச்சுப் பரிந்துரைத்ததையும்1956-57ஆம் ஆண்டறிக்கை கூறுகிறது.
எனினும் 1958ஆம் ஆண்டு வரை, இந்தியைத் தவிர வேறு எந்தவொரு இந்திய மொழியின் வளர்ச்சிக்காகவும் நடுவண் அரசின் கல்வியமைச்சு நேரடியாகநிதி ஒதுக்கவுமில்லை, ஆண்டறிக்கைகளில் குறிப்பிடவுமில்லை.
1958ஆம் ஆண்டு முதலாக நடுவண் அரசின் உள்துறையமைச்சுத் துறை வடமொழி, பாரசீகம், அரபு ஆகிய மொழி அறிஞர்களுக்குக் குடியரசு நாளன்றுவிருதும் பணமுடிப்பும் வழங்கத் தொடங்கியது.
1959இல் வடமொழி மைய வாரியத்தை நடுவண் அரசு அமைத்தது, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பதஞ்சலி சாஸ்திரியை அதன் தலைவராக நியமித்தது.1997இல் நீதியரசர் ரங்கநாத மிஸ்ரா இவ்வாரியத் தலைவராக ஆனார்.
1960இல் வடமொழி ஆணையம் அமைந்தது. வடமொழி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகளின் தொடக்கம் இவைதாம். கல்வி அமைச்சுத்துறையில்மொழிகளுக்கான பிரிவு ஏற்பட்டது. இந்திக்கும் வடமொழிக்கும் நிதி ஒதுக்கும் பிரிவாக இஃது அமைந்தது.
வடமொழியின் வளர்ச்சி, பெருக்கம், வளமாக்கல் இவையாவுக்குமாக 1961-62இல் ரூ. 645,000 ரூபாய் ஒதுக்கிய நடுவண் அரசு, அத்தொகையைக்குருகுலங்களுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளித்தது. தேவநாகரி வடிவத்தை இந்தியாவிலுள்ள ஏனைய மொழிகளின் ஒலிகளுடன்இணைக்கவோ, அவ்வொலிகளுக்கேற்பப் புதிய வரிவடிவங்களைத் தேவநாகரியில் இணைக்கவோ திட்டமொன்றையும் அரசு கொண்டு வந்தது, நிதியும்ஒதுக்கியது.
இந்தியாவின் மாநில அரசுகள் மற்றும் நேரடி ஆட்சிப் பகுதிகள் மூலம் வடமொழியை வளர்ப்பதற்கான நடுவண் அரசின் திட்டம் 1962ஆம் ஆண்டுமுதலாக நடைமுறையில் உள்ளது. 1964ல் இந்தி மொழி வளர்ச்சிக்கெனத் தனி ஒதுக்கீடு, வடமொழி உள்ளிட்ட இக்கால இந்திய மொழிகள்வளர்ச்சிக்கெனத் தனி ஒதுக்கீடு, என நடுவண் அரசின் கல்வி அமைச்சகம் நிதி வழங்கியது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் இதே தலைப்பில்திட்டக்கூறு அமைந்தது. வடமொழியைச் செம்மொழியாக அப்பொழுது கல்வியமைச்சுத்துறை குறிப்பிடவேயில்லை. இக்கால மொழிகளுள்ஒன்றாகவே வடமொழியை 1964இல் கல்வியமைச்சுத்துறை கருதியது.
ஏனைய இக்கால இந்திய மொழிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் வடமொழியின் பெயரை மட்டும் குறித்தே அப்பொழுதைய திட்டமும் நிதிஒதுக்கீடும் இருந்தன. கல்வியமைச்சுத்துறையில் மொழிகளுக்கான பிரிவு என இருந்ததை, 1970ஆம் ஆண்டு முதலாக மொழிகளை வளர்க்கும் பிரிவுஎன மாற்றினர்.
விடுதலைக்குப்பின் 1958ஆம் ஆண்டு வரை வடமொழி வளர்ச்சிக்கென நிதி எதையும் ஒதுக்காத நடுவண் அரசின் கல்வியமைச்சுத்துறை, 1962ஆம் ஆண்டில்பெயர் சொல்லி நிதி ஒதுக்கீடு செய்ததும், 1965ஆம் ஆண்டில் இக்கால மொழிகளுள் ஒன்றாகக் கருதியதும், 1970ஆம் ஆண்டில் வடமொழிவளர்ச்சிக்காகத் தனித் தலைப்பு ஒன்றைக் கல்வியமைச்சுத்துறை தொடங்கியதும் படிப்படியான வளர்ச்சியேயாகும்.
தில்லியில் ஒன்றும் திருப்பதியில் ஒன்றுமாக வடமொழிக் கல்விக்கும் வளர்ச்சிக்குமாக 5.5.1970இல் தொடங்கிய இரு நிறுவனங்கள் பின்னர் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள் ஆயின. 1972ஆம் ஆண்டில் அனைத்துலக வடமொழி மாநாட்டை நடுவண் அரசின் கல்வியமைச்சுத்துறையே முன்னின்று நடத்தியது.அவ்வாண்டிலேயே மாநிலங்களின் கல்வி அதிகாரிகளை அழைத்து வடமொழியைப் பேணவும், வளர்க்கவும், மேம்படுத்தவும் வழிவகைகளை ஆராயும்மாநாடு ஒன்றையும் நடத்தியது.
1977ஆம் ஆண்டில் நடுவண் அரசின் கல்வியமைச்சுத்துறை மொழி வளர்ச்சிப் பிரிவில் நான்கு தலைப்புகளாக நிதி ஒதுக்கீடு அமைந்தது.
1.இந்தி மொழி வளர்ச்சி
2. இக்கால இந்திய மொழிகளின் வளர்ச்சி
3. ஆங்கிலம் மற்றும் பிற நாட்டுமொழிகளின் வளர்ச்சி
4. வடமொழி, அரபு மற்றும் பாரசீகம் ஆகிய செம்மொழிகளின் வளர்ச்சி.
செம்மொழி என்ற சொல்லாட்சி யைக் கடந்த இருபத்தேழு ஆண்டு களாக (1977ஆம் ஆண்டு தொடங்கி) நடுவண் அரசின் கல்வியமைச்சுத் துறைபயன்படுத்தி வருகிறது. வடமொழி, அரபு, பாரசீகம் ஆகியன செம்மொழிகள் என்பதை நடுவண் அரசின் கல்வியமைச்சுத் துறை ஏற்றுக்கொண்டுஅவற்றின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கி வருகிறது.
வடமொழி வளர்ச்சிக்காகப் பல இலட்ச ரூபாய்களை ஒதுக்கிய கல்வியமைச்சுத்துறை அந்த ஆண்டில் அரபி மற்றும் பாரசீக மொழிகளின் வளர்ச்சிக்காகமூன்று இலட்சம் ரூபாய்களையும் ஒதுக்கியது.
1978ஆம் ஆண்டு வரை உள்துறையின் பணியாக இருந்த செம்மொழி அறிஞருக்குக் குடியரசு தலைவர் விருது வழங்கும் திட்டம், 1978ஆம் ஆண்டு முதலாகநடுவண் அரசின் கல்வியமைச்சுத் துறையின் திட்டமாகியது. கல்வியமைச்சின் பரிந்துரைப்படி வடமொழி, அரபு, பாரசீகம் ஆகிய செம்மொழிகளின்புலமையாளருக்குக் குடியரசு தலைவர் விருதுகள் கிடைத்து வருகின்றன. 1978 ஆகஸ்ட் 15இல் 97 புலமையாளர்கள் இவ்விருதுகளைப் பெற்றனர்.
1981ஆம் ஆண்டு வரை இதே கொள்கை தொடர்ந்தது. ஒவ்வோர் ஆண்டும் செம்மொழிகளான வடமொழி, அரபு, பாரசீகம் இவற்றின்வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கி வந்தது. உருது மொழி, சிந்தி மொழி ஆகிய இரண்டையும் வளர்க்க, இக்கால மொழிகளின் தலைப்பில் துணைத் தலைப்புகளாக1981ஆம் ஆண்டு முதலாகக் கல்வி அமைச்சானது நிதியை ஒதுக்கி வருகிறது.
செம்மொழிகளான வடமொழி, அரபு, பாரசீகம் ஆகியவற்றை வளர்க்கவும் பரப்பவும் முந்தைய ஐந்தாண்டுத் திட்டங்களில உள்ளது போலவே ஏழாவதுஐந்தாண்டுத் திட்டத்திலும் திட்டக்கூறு உள்ளது. இவ்வாறு கல்வியமைச்சுத் துறையின் 1996-97ஆம் ஆண்டறிக்கையில் கூறியுள்ளனர்.
1986ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையிலும் 1992ஆம் ஆண்டின் புதுப்பித்த செயல் திட்டத்திலும் நடுவண் அரசின் வடமொழிக்கான இந்தத் திட்டம்உள்ளடங்கியது.
1990ஆம் ஆண்டுவரை கல்வி அமைச்சின் மொழிகள் வளர்ச்சிக்கான கொள்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் வரவில்லை.
1991ஆம் ஆண்டு முதலாக, உருது மொழி மற்றும் சிந்தி மொழி வளர்ச்சிக்காகத் தனித்தனி வாரியங்கள் அமைந்தன. சிந்தி மொழி இந்தியாவில் உள்ளஎந்த மாநிலத்தின் மொழியாகவும் இல்லை. பாகிஸ்தானில் உள்ள சிந்தி மாநில மொழியேயாகும்.
1994ஆம் ஆண்டு முதலாக வடமொழி, அரபு, பாரசீகம், பாலி, பிராகிருதம் ஆகிய ஐந்து செம்மொழிகளின் புலமைச் சான்றோருக்குக்கல்வியமைச்சுத் துறையின் பரிந்துரைப்படி செம்மொழிக்கான விருதுகளைக் குடியரசு தலைவர் வழங்கி வருகிறார்.
இந்த விருது வழங்கல் மூலம் புதிதாகப் பாலியையும் பிராகிருதத்தையும் 1994ஆம் ஆண்டு முதல் செம்மொழிகளாகக் கல்வியமைச்சுத்துறை ஏற்றது.
1996இல் உருது, சிந்தி ஆகிய மொழிகளின் வாரியங்கள் தரம் உயர்த்தப்பட்டு அம்மொழிகளுக்கான தேசியக் கழகங்கள் ஆயின. வடமொழியானது ஒருசெம்மொழி மட்டுமன்று: பாரதப் பண்பாட்டுப் பேழையுமாகும். இப்பண்பாட்டுப் பேழையைப் பாதுகாக்க வேண்டும், எங்கும் பரப்ப வேண்டும், இதுகட்டாயத் தேவை என இந்திய அரசு கருதுகிறது.
எனவே, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணைக்கு அமையவும், 1986ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தவும்வட மொழிக்கல்வியை வளர்க்கவும் இந்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து, நிறை வேற்றி வருகிறது. இவ்வாறு 1985-86ஆம்ஆண்டறிக்கையில் கூறியுள்ளனர்.
1999-2000 ஆம் ஆண்டு முழுவதையும் வடமொழி ஆண்டாகக் கொண்டாடக் கல்வியமைச்சுத்துறை நிதி ஒதுக்கியது. விழாக்கள் முழுமையாகமுடிவடையாதலால், மீண்டும் மார்ச்சு 2001 வரை கொண்டாட் டத்தை நீடிக்க மேலதிக நிதி ஒதுக்கியது.
2001-02 நிதி ஆண்டில் செம்மொழியான வடமொழிக் கல்விக்கும் வளர்ச்சிக்குமாக ரூ. 1,050 கோடியைக் கல்வியமைச்சுத்துறை ஒதுக்கியது.
செம்மொழியாக ஏற்றுக்கொண்ட அரபு மொழி வளர்ச்சிக்காகக் காலத்துக்குக் காலம் நிதி ஒதுக்கி வந்துள்ளனர். 2000-2001 நிதி ஆண்டில் அரபுமொழி வளர்ச்சிக்காகக் ரூ.12 கோடியும் 2001-2002 நிதி ஆண்டில் ரூ. 10.5 கோடியும் கல்வியமைச்சுத்துறை ஒதுக்கியது.
இவ்வாறு இந்திய அரசின் கல்வித்துறை அதாவது மனிதவள மேம்பாட்டுத் துறைதான் வடமொழி உள்ளிட்ட மொழிகளைச் செம்மொழிப் பட்டியலில்சேர்த்து அவற்றின் வளர்ச்சிக்குக் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கியும் சிறப்பித்து வருகிறது.ஆனால் செம்மொழிகள் பட்டியலில் தமிழைச் சேர்க்க அதே கல்வித்துறை முன்வரவில்லை. மாறாகப் பண்பாட்டுத்துறையின் சார்பில் தமிழ் செம்மொழிஅறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பாகுபாடு ஏன்?.
வடமொழி மட்டுமே கல்விக்குரிய மொழியா? தமிழ் கல்விக்குரிய மொழி இல்லையா? வடமொழி தேவபாசை எனவும் தமிழ் சூத்திரமொழி எனவும்இந்திய அரசு கருதுகிறதா?
அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணை, ஐந்தாண்டுத் திட்டக் கூறு, 1986ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை, இவைதாம் தமிழைச்செம்மொழியாக்கும் அரசு அறிவிப்புக்கு அடித்தளமாக வேண்டும். மரபுவழிக் கொள்கையோ, அமைச்சரவைத் தீர்மானமோ, வேறெந்தஅரசாணையுமோ, பண்பாட்டமைச்சுத் துறையின் அறிவிப்போ தமிழைச் செம்மொழியென நடுவணரசு ஏற்பதற்கு உரியதாகாது.
2001ஆம் ஆண்டில் அமைந்த பிரதமர் தலைமையிலான இந்திய மொழிகளுக்கான தேசிய அவை கூடிக் கல்வி அமைச்சின் செம்மொழிப் பட்டியலில்தமிழைச் சேர்க்குமாறும் உரிய நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறும் ஆலோசனை வழங்க வேண்டும், அதைக் கல்வியமைச்சுத்துறை ஏற்றுநடைமுறைப்படுத்துவதே தமிழரின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்பதாக அமையும்.
(இக்கட்டுரை தென்செய்தி நவம்பர் 01 இதழில் வெளியானது)
- தென்செய்தி([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications