உண்மைகளைக் கூறி...
இந்த விபத்து மிகக் கொடியது, அதற்கான சகல எதிர்வினைகளும் அதை இன்னும் கொடியதாக்குகின்றன. மக்கள் இதைகொடுமையான விபத்தென பார்க்கின்றனர். விதியென இதை எதிர்கொண்டு தம்மை ஆற்றிக் கொள்கின்றனர்.
அரசியல்வாதிகள் தம்மால் இயன்ற அனுதாபத்தையும் உதவியையும் செய்கின்றனர். சில தனி நபர்கள், அமைப்புகள் உதவிபுரிகின்றனர். இவ்வளவுதான? கிட்டத்தட்ட 90 குழந்தைகளின் கொடுமையான இறப்பு கோருவது இதைத் தானா? இதற்கு முன்திருச்சி கல்யாண மண்டப விபத்து, கும்பகோண மகாமக விபத்து, வாரங்கல் ரயில் விபத்து இப்படி பல விபத்துக்களின்போதும்நாம் இதையேதான் செய்தோம், நினைவிருக்கிறதா?
நாடு முழுவதிலும் கிட்டத்தட்ட 300 ரயில் பாலங்கள் எந்த நேரத்திலும் விழுகின்ற நிலையில் இருப்பதாய் விசாரணைக் கமிஷன்உறுதியாய் சொன்னபோதிலும் அவற்றை சீர்செய்யாமல் எந் நேரமும் வெடிக்கும் வெடிகுண்டைப் போல இருக்க அனுமதிக்கும்அரசுகளை என்ன சொல்வது?
இவர்கள் எந்த விதத்தில் தீவிரவாதிகளைவிட மாறுபட்டவர்கள்?
இவர்கள் இன்னொரு விபத்து நடக்கும்போது தவறாமல் ஓடிவந்து கண்ணீர் உகுப்பார்கள், பத்திரிக்கைகள் படம் காண்பிக்கும்.அறிஞர்கள் காசு திரண்டி தண்ணீர் பந்தல் வைக்கலாமா? கூரைக் கொட்டரை மாற்றலாமா? என்-று விவாதிப்பார்கள்.
கூரைப் பள்ளிகள், வீடுகள் இந்தியாவில் புதியவையல்ல, தீ விபத்தும் புதிதல்ல. அவைகளில் கண்டிப்பதற்கு ஒன்றுமில்லை.ஆனால், பள்ளியென்ற பெயரில் மூன்றாம் மாடி (மொட்டை மாடியில்) தப்பிக்கவும், காப்பற்றவும் வழியில்லாமல் ஒருஇருட்டறைக்குள் பள்ளி நடத்திட முடியும் என்று நினைக்கிற அராஜகம் கண்டிக்கத்தக்கது.
பள்ளியென்றால் யூனிபார்ம் போட்டு, டை கட்டி, மம்மி டாடி சொல்லிக் கொடுத்து, ரிக்ஷாவில் அழைத்துப் போய் கொண்டு வரும்அமைப்பென்று புரிந்து கொள்கிற மக்களின் மூடத்தனம் கண்டிக்கத்தக்கது.
கல்வியென்றால் முட்டி மோதி ஓடி, காசு கொடுத்து, கைகால் பிடித்து எப்படியாவது காசு சம்பாதிக்கவும் அதைக் காட்சிப்பொருளாக்கி கெளரவம் தேடவுமான வழி என்று புரிந்து கொண்டிக்கிற சமூக விழுமியம் கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் என்றால்அடிமைகள் என்றும், கல்வியென்பதை இன்னும் அதிகார வசதி என்று புரிந்து கொண்டிருக்கிற கல்வி நிறுவன மனப்பான்மைகண்டிக்கத்தக்கது.
மக்கள் தமது ஆளுதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் அனுதாபத்துக்கும் தாம் வீசியெறிகிற இலவசங்களுக்குமான பாத்திரங்கள் என்றுகருதுகிற, இப்படிச் செய்வதையே ஆட்சி புரிவது என்று நம்புகிற அரசியல்வாதிகளும் கண்டித்தக்கத்தவர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக கண்டிக்கத்தக்கவர்கள், சபிக்கத்தக்கவர்கள் ஒருசாரார். அவர்களாலேயே இத்தனை சீரழிவுகளும்,ஊழல்களும், அராஜகங்களும், மூடத்தனங்களும் நிலவுகின்றன. உலகு என்பது பெரியோர் மட்டே என்பது தமிழ் மொழி.இப்படிப்பட்ட சீரழிந்து போன எந்த விழுமியங்களையும், கற்பிதங்களையும், ஒழு-க்கங்களையும், நம்பிக்கைகளையும்,வழிபாடுகளையும், சிறிதும் உடைக்காமலும், அவற்றின் அரிதரத்தைக் கலைக்காமலும், அவற்றின் அநாகரீகங்களைவெளிக்கொணர்ந்து மக்களுக்கு அவர்களது உண்மையான இடத்தை, கல்வியை, உரிமையை, பொறுப்பை சொல்லாமலும்,வெளிப்படுத்தாமலும் இருக்கின்ற அறிஞர்கள், சான்றோர்கள், கற்றோர்கள் இவர்கள் தான் இந்தபெருங்கண்டனத்துக்குரியவர்கள்.
விடுதலை என்பது எவருடைய கருணையிலும் வாழ்வதல்ல. எவருடைய அனுதாபத்திலும் உழல்வதல்ல. விடுதலை என்பதன்விளக்கமாக நான் நினைப்பது ஒருவர் தம்மைப்பற்றிய சரியான புரிதலைப் பெறும்போது கண்டுகொள்கிற பிறப்புரிமை என்பதுதான்.
அது அரசியல் விடுதலையாகட்டும், பொருளாதார விடுதலையாகப்பட்டும், ஆன்மிக விடுதலையாகட்டும், விடுதலைக்கானவிளக்கம் அது என்றுதான் நான் கருதுகிறேன். எனவே, விடுதலை என்பது எல்லோருக்குமானது, அல்லது அதைஎல்லோருக்குமானதாக ஆக்க அறிஞர்கள் உழைக்க வேண்டும்.
பாரதி அதன் பொருட்டே பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை... என்றார். இந்த விடுதலைக்கான வழியாகதேசியக் கல்வியொன்றே வழியெனச் சொன்னான். வெறும் ஆங்கிலேயே ஆதிக்க எதிர்ப்பாக அவனது விடுதலைக் குரலைவிளங்கிக் கொண்டோம். வெள்ளையரசில் இருந்து பெறும் விடுதலை வெறும் ஆதிக்க மாற்றம் மட்டுமே என்பதைக் கூடஅறியாதவனா அவன்? ஆனால், அப்படி அவனைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நாம் மூடர்களாய் இருந்தோம். எனவே நமதுஅரசியல், பொருளாதாரம், ஆன்மிகம் என்று சொல்லிக் கொள்கிற எதுவும் மக்களை விடுவிக்கிற வகையாய் இல்லை.
ஏனெனில் அந்தப் பொறுப்புக்களில் இருப்பவர்கள் அதற்கு அருகதையாக தம்மைச் சொல்லிக் கொள்கிறவர்கள் விடுதலைஅடைந்தவர்காய் இல்லை. சான்றோர்கள் அற்ற நாடாய் போய்விட்டது இது. மக்களையோ, தம்மையோ கருத்தில் கொள்ளாமல்ஒரு நாளைக்கு முன்னூறு பக்கங்கள் எழுதுவதால் தம்மை எழுத்தளராய் சொல்லிக் கொள்ளும் படைப்பாளிகள், ஹாலிவுட்சினிமா அத்தனையையும் அப்படியே சுட்டு (?) தந்து தன்னை அதிமேதாவிகளாய்க் காட்டிக் கொள்ளும் இயக்குனர்இரத்தினங்கள், சாதி முதல் சகலவிதமான அழுக்குகளையும் பாதுகாக்கும் சங்கரமடங்கள், ஜனநாயகம், புரட்சி என்று காட்டி காசுபொறுக்கும் அரசியல்வாதிகள், வெறும் அடியாட்களாயும், அடிமைகளாயும் குறுகிப் போன கல்வியாளர்கள், துணை வேந்தர்கள்,இவர்களத்தனை பேரையும் படங்காட்டி ஊரை ஏமாற்றும் ஊடகங்கள்.
இவர்களில் எவருடைய இடத்தையாவது எப்படியாவது தமது பிள்ளை எட்டிப்பிடித்துவிடாதா என ஏங்கும் மத்தியதர வர்க்கம்,அதற்காக எப்படியாவது ஒரு பள்ளி, ஏதாவது ஒரு பாடம். இவர்களிடமிருந்து உதிரும் கருணையையும், இலவசங்களையும்எட்டிப் பிடிக்க வேண்டுமென்றே நாம் கட்டிக் காப்பாற்றி வரும் அடித்தட்டு மக்கள். இந்த மதிப்பீடுகள் எதையும் கேள்வி கேட்காதஉறையும் பீடங்களை உடைக்காமல், இவற்றை வழிபடும் பெரியோர்கள்....
இதோ இன்னொரு விபத்து, இன்னொரு கருணை வெள்ளம், கண்ணீர்க் காட்சிகள், அனுதாப ஓலங்கள், ஓலைக் கொட்டகை முதல்அடுப்பு நெருப்பு வரை குற்றம் சொல்லி திசை திருப்பும் விவாதங்கள்....
* * *
சில நாட்களுக்கு முன் நானும் எனது ஜெர்மானிய நண்பரும் அடுத்த மாதம் வரப் போகும் அவருடைய விருந்தினருக்கு ஒரு அறைபதிவு செய்ய சென்றிருந்தோம். இதைச் செய்ய ஏகப்பட்ட கடிதங்கள், நடுவில் இதைக் கவனித்துக் கொள்ளும் அலுவலரின்விடுப்புகள், கடிதத்தை யாரிடம் கொடுப்பது என்ற குழப்பங்கள் (இதை வழமையாக செய்து வரும் அலுவலகம் தான் அது),சம்பந்தமில்லாமல் நண்பருக்கே அவருக்கு புரியாத மொழியில் திட்டு, இதையெல்லாம் கண்டு ஜெர்மன் நண்பருக்கு வியப்பு.இத்தனைக்கும் பிறகு கடைசியில் விருந்தினர்அறையை பதிவு செய்யும் அலுவலர் ஒருவருக்கு 5 நாள்தான் அறை ஒதுக்க முடியும்என்றார்.
அவரே நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொல்லிவிட்டார். நண்பர் என்னிடம் கேட்டார், ஏன் ஒருவர் தமதுவிருந்தினரைத் தங்க வைக்கவென தீர்மானமான ஒழுங்குபடுத்தப்பட்ட வழிமுறைகள், விதிகள், வசதிகள் இல்லையா? என்னிடம்யாரும் அப்படிட்ட விதிகளையும் சொல்லவோ, எனக்கு என்னென்ன உரிமைகள் பொறுப்புகள் இருக்கின்றன என்று சொல்லவோஇல்லையே என்றார்.
நான் அவரிடம் சொன்னேன், இங்கு மட்டுமல்ல, இந்த நாட்டிலேயே ஒரே விதிதான் இருக்கிறது. அது மக்களுக்குஅவர்களுடையே உரிமைகளையும், பொறுப்புகளையும் சொல்லாதவரை, அவர்களை எப்போதும் குழப்பத்திலும்,சார்ந்திருப்பதிலும் வைத்திருக்குக்கும் வரை நீ அவர்களை அதிகாரம் செய்யலாம், குற்ற உணர்வில் வைக்கலாம், கருணைகாட்டலாம், காசு சம்பாதிக்கலாம் என்ற விதி தான் அது.
இந்த நாட்டை சட்டம் ஆளுகிறது என்று சொல்வதை விட இந்த ஒரு விதியே ஆளுகிறது என்று சொல்லலாம் என்றேன்.
உற்றவர் நாட்டவர் ஊரார்- இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம்- இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.
டாக்டர். என். தங்கமணி([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications