மானமும் அறிவும் தமிழர்க்கு அழகு
கடந்த 11ம் தேதி தெருவெங்கும் பெண்களின் கூட்டம். குறிப்பாக நகைக் கடைகளில் மிகப்பெரும் நெரிசல். சென்னையில் சிலநகைக்கடைகள் காலை 5 மணிக்கே திறந்து விட்டார்களாம்.
அப்படி என்ன அந்த நாளுக்குச் சிறப்பு? முண்டியடித்துக் கொண்டு நகை வாங்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் எல்லோரும் ஒரேஇரவில் பெரும் செல்வந்தர்களாகி விட்டார்களா என்ன?
குழப்பத்துடன் விழிப்பவர்களுக்கு அருகில் உள்ளவர்கள் விடை சொல்கிறார்கள், இன்று அக்சய திதியை. அப்படியென்றால்...?
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படியொரு சொல் இருப்பதே எவருக்கும் தெரியாது. நகைக்கடைக் காரர்களின்கண்டுபிடிப்பாக இது இருக்கலாம்.
சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்சய திதியையாம். திருமாலின் அவதாரம்பரசுராமன் இந்த நாளில் தான் பிறந்தாராம். இந்த நாளில் நகை வாங்கினால் வீட்டிற்குச் செல்வம் வந்து குவியுமாம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிவிடப்பட்ட கதை இன்று தழைத்துச் செழித்து வளர்ந்திருக்கிறது. மூடநம்பிக்கையால்உந்தப்பட்டு எல்லோரும் நகைக்கடை நோக்கி ஓடுகின்றனர்.
இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன், உடன்பிறந்த சகோதரிகளுக்கு பச்சை வண்ணப் புடவை வாங்கிக் கொடுத்தால்புண்ணியம் என்று புனையப்பட்ட கதையை நம்பி, ஊரெல்லாம் பச்சை மயமானது.
எத்தனை பெரியார் தோன்றினாலும் நம் மக்களின் மூடநம்பிக்கைகளை மாற்ற முடியாதோ என்னும் அளவிற்கு அச்சம் பரவுகிறது.
சென்ற ஆண்டு இதே அக்சய திதியையில் நகை வாங்கியவர்கள் வீடுகளுக்கெல்லாம் செல்வம் வந்து குவிந்து விட்டதா? இந்தஆண்டு நாட்டில் வறுமையே இல்லையா? மக்கள் நகை வாங்கினால், நகைக் கடைக்காரருக்குத் தான் செல்வம் வந்து குவியும்.
எந்தப் பகுத்தறிவுச் சிந்தனையும் இல்லாமல், யார் எது கூறினாலும் அதை நம்பிக் கொண்டு ஒரே திசையில் மந்தைகளாகஓடிக்கொண்டிருந்தால் மக்கள் வளம் பெறுவது எப்படி?
தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களில் ஒரு சாரார் இறை நம்பிக்கை உடையவர்களாக இருக்கக் கூடும். ஆனால் எவரும்மூடநம்பிக்கை உடையவராக இருக்க முடியாது: இருக்கவும் கூடாது. எனவே தமிழ் மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானகருத்துப் பரவலைச் செய்ய வேண்டியதும் நம் கடமையாகவே உள்ளது.
மானமும் அறிவும் தான் மனிதருக்கு மட்டுமன்று, ஒரு சமூகத்திற்கும் அழகு. அறிவார்ந்த தமிழ்ச் சமூகமே நம்முடைய எதிர்காலஇலக்காக இருக்க வேண்டும்.
- தென் செய்தி தலையங்கம்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications