நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி
நெய்வேலி: என்எல்சி நிறுவன ஆதரவுடன் நடைபெறும் 10-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 5 முதல் 14-ம் தேதிவரை வட்டம் 11ல் லிக்னைட் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
என்எல்சி நிறுவனத்தின் ஆதரவுடன் மாநில அளவிலான புத்தகக் கண்காட்சி தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடைபெறுகிறது. 10 தினங்கள் நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சியில் தலைசிறந்த 150 பதிப்பாளர்களின் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பன்மொழி நூல்கள் பார்வைக்கும் விற்பனைக்கு வைக்கப்படும்
குழந்தைகளுக்கான தமிழ், ஆங்கிலம் இந்தி மற்றும் பிறமொழி நூல்கள் அவரவர் வகுப்புக்கும் வயதுக்கும் ஏற்றவகையில் கண்காட்சியின் இடம்பெறும்.
அதோடு புத்தகக் கண்காட்சியை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சியின் போது தினம் ஒரு பதிப்பாளர், ஒரு எழுத்தாளர், கௌரவிக்கப்படுகின்றனர்.
தினமணி நாளிதழும்-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிக் குழுவினரும் இணைந்து மாநில தழுவிய இலக்கியப்போட்டிகளை நடத்தி கல்லூரி மற்றும் பள்ளி மாணவ,மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
என்எல்சியின் 52 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் வகையில் மாபெரும் புகைப்படக் கண்காட்சியும், பொதுமக்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்எல்சி மருத்துவமனையின் சார்பில் ரத்தவகை மற்றும் ரத்தப்பிரிவு, எய்ட்ஸ் கண்டறிதல் ஆகியவகை உடனடியாக கண்டறிந்து தெரிவிக்கப்பட உள்ளது.
பார்வையாளர்கள் இயற்கை உபாதைக்கு பயன்படுத்த நவீன முறையிலும், சுகாதாரமான முறையிலும் நடமாடும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வசதிகளுடன் நடைபெறும் இக்கண்காட்சியின் ஏற்பாடுகளை நெய்வேலிப் புத்ககக் கண்காட்சிக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications