குட்டீஸ்ளுக்கு பப்பர மிட்டாய்!
அந்தக் காலத்தில் வீட்டில் தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். தங்களது பேரக்குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டே கதை சொல்வார்கள். இப்படிக் கதை கேட்கும் பழக்கம் என்பது இப்போது நம்மிடையே சுத்தமாக இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
காரணம், முதியோர் இல்லங்களை நோக்கி பெரியவர்களை நம்மில் பலர் அனுப்பிக் கொண்டிருப்பதுதான். அல்லது பெரியவர்கள் தனியாகவும், பிள்ளைகள் தனியாகவும் வசிக்கும் சூழல் அதிகரித்து விட்டதும் ஒரு காரணம்.
இதன் காரணமாக இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு கதைகள் சொல்ல ஆள் இல்லை. கதை கேட்கும் பழக்கம் குழந்தைகளின் ஆர்வத்தையும், புத்திக் கூர்மையையும் தூண்டி விடும் என்று ஒரு ஆய்வு கூறுகிரது. புத்துணர்ச்சியோடும், புதிய சிந்தனைகளோடும் அவர்கள் வளருவார்கள் என்கிறது அந்த ஆய்வு.
இந்த நிலையில்தான் கதை சொல்லும் பழக்கத்தை பல வகைகளிலும் பலரும் மீண்டும் ஊக்குவித்து வருகின்றனர். கதை சொல்லும் நிகழ்ச்சிகளும் கூட நடத்தப்படுவதைக் காண முடிகிறது.
இந்த நிலையில்தான் பப்பர மிட்டாய் என்ற வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது களஞ்சியம் டிரஸ்ட். ஏ.எம்.சுஷ்மிதா, என்.சி.காவ்யா, ஏ.அட்சயா, ஆர்.கீர்த்தனா, ஸ்ருதி குமார், சஹானா குமார் ஆகிய ஐந்து குட்டீஸ்கள் சொல்லியுள்ள சிறுகதைகள் இந்த ஆடியோ சிடியில் அடங்கியுள்ளது.
இந்த சிடி வெளியீட்டு விழா சென்னை வாணி மஹாலில் நடந்தது. நடிகர் தனுஷ் வெளியிட, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பெற்றுக் கொண்டார். கேமராமேன் வேல்ராஜ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், தனுஷ் பேசுகையில், இந்த சிடியை எனது மகனுக்குப் போட்டுக் காட்டி கதை கேட்கச் செய்வேன். தாத்தாக்களும், பாட்டிகளும் செய்ய வேண்டிய கடமையை இந்த சிடி நினைவுபடுத்துகிறது என்றார்.
பல்வேறு சமூக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி களஞ்சியம் டிரஸ்ட், மேற்கொண்டுள்ள வித்தியாசமான முயற்சிதான் இந்த ஆடியோ சிடி என்கிறார் அதன் நிறுவனரான ரவிராஜ். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்து, ஆதரவு கொடுத்ததற்காக தனுஷ், ஜி.வி.பிரகாஷை அவர் மனதார பாராட்டினார்.
இந்த சிடிக்களை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது களஞ்சியம் டிரஸ்ட். சிடி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 91-44-24455568/43042414
சரி, அது என்ன பப்பர மிட்டாய்?
இது கிராமங்களில் மட்டுமே புழங்கி பந்த ஒரு வகை மிட்டாய். இன்று கிராமங்களில் கூட இது அருகி விட்டது. மறைந்து போன ஒரு கலையான கதை சொல்லும் பழக்கத்தை நினைவுபடுத்துவதற்காக, மறைந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு மிட்டாயின் பெயரை சிம்பாலிக் ஆக வைத்துள்ளது களஞ்சியம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications