அம்பையில் 500 சாதனையாளர்களுக்கு விருது
அம்பை: அம்பாசமுத்திரத்தில் அவதார் அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 500 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதற்கு வெங்காடம்பட்டி அறக்கட்டளை சமுதாயக் கல்லூரி இயக்குநர் பூ.திருமாறன் தலைமை வகித்தார். எஸ்.இ. டேவிஸ் முன்னிலை வகித்தார்.
கல்வி, கலை, இலக்கியம், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 500-க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் சேவியர் அல்போன்ஸ் விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.
ஆசிரியர் வ. சம்பந்தம் எழுதிய கவிதை நூலின் முதல் பிரதியை ஆராய்ச்சியாளர்கள் எட்வின் வின்னிங்டன், ஜேம்ஸ் எல்லிஸ் ஆகியோர் வெளியிட்டனர். அதை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பி. மாரியப்பன் பெற்றுக் கொண்டார்.
கலைக் கல்லூரி முதல்வர் மு. அப்துல் ஹனீப், தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சு. சிவசைலம், தமிழாசிரியர் ரா. பாஸ்கரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
ஆர். நல்லையாராஜ் நன்றி கூறினார்.


Click it and Unblock the Notifications
