இரவிலும் இனி தாஜ்மஹாலை ரசிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

Taj Mahal at night
தாஜ்மஹாலை இரவிலும் பார்த்து ரசிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாஜ் மஹாலை இரவு நேரத்திலும் பார்த்து ரசிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இரவிலும் கூட தாஜ்மஹாலை பார்க்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் அதன் பின்னர் இரவில் தாஜ் மஹாலைப் பார்க்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இரவிலும் தாஜ் மஹாலைப் பார்க்க அனுமதிக்க கோரி சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாதத்திற்கு நான்கு முறை மட்டும் இரவு நேரத்திலும் தாஜ் மஹாலைப் பார்க்க அனுமதிக்கலாம் என அனுமதி அளித்துள்ளது.

ஒரு இரவு 400 பேர் வரை அனுமதிக்கலாம் எனவும் ஆக்ரா மாவட்ட நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+