'இக்னோ'வின் ஜெர்மன் மொழி பயிற்சி
தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் (இக்னோ) மதுரை மண்டலத்தில் 6 மாதகால ஜெர்மன் மொழி சான்றிதழ் பயிற்சி வரும் ஜனவரியில் தொடங்கப்படுகிறது.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேக்ஸ் முல்லர் நிறுவனத்துடன் இணைந்து இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து இப் பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல இயக்குநர் எம். சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியது:
இக்னோ வாயிலாக 160 வகையான படிப்புகள் நடத்தப்படுகின்றன. இப்படிப்புகள் அனைத்தையும் ஆன்-லைன் மூலம் பயிற்றுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேக்ஸ் முல்லர் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மண்டலத்தில் இக்னோ மூலம் கடந்த ஆண்டு ஜெர்மன் மொழி சான்றிதழ் பயிற்சி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர்.
சென்னையில் இப்பயிற்சிக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், தற்போது மதுரை மண்டலத்துக்கும் விரிவுபடுத்துகிறோம். இதன் மூலம், மதுரை மண்டலத்துக்கு உள்பட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
18 வயது நிரம்பிய 12-ம் வகுப்பு படித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான ஆங்கில அறிவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் கட்டணம் ரூ. 1,500.
தமிழகம் முழுவதும் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து இப்பயிற்சி பட்டயப் படிப்பாகவோ, பட்டப் படிப்பாகவோ மாற்றப்படும்.
பசுமலை பகுதியில் உள்ள மதுரை மண்டல அலுவலகத்திலோ அல்லது கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய இடங்களில் இப்பல்கலை. படிப்பு மையங்களிலோ 100 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி பயிற்சிக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் மதுரை மண்டல அலுவலகத்துக்கு இம்மாதம் 26-ம் தேதிக்குள் வந்துசேரும்படி அனுப்பவேண்டும் என்றார் சண்முகம்.
மேக்ஸ் முல்லர் நிறுவனத்தின் திட்ட அலுவலர் ருடிகர் பஞ்ஜட் கூறியது:
ஜெர்மன் மொழியில் தேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. இரு வாரங்களுக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்பு வகுப்புகள் நடைபெறும். சி.டி. ரோம், விடியோ சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் நிறைவில் தேர்வு நடத்தப்பட்டு, இக்னோ-மேக்ஸ் முல்லர் நிறுவனம் இணைந்து சான்றிதழ் வழங்கப்படும்.
இந்திய - ஜெர்மானிய உறவை வலுப்படுத்தும் வகையில் வருங்காலத்தில் இந்தியா முழுவதும் இப்பயிற்சி விரிவுபடுத்தப்படும் என்றார் பஞ்ஜட்.
மேலும் விபரங்கள் அறிய 0452 - 238 0387 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
திருப்பரங்குன்றம் தீபம்.. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications