நாயை லிப்ட்டில் கொண்டு செல்ல நுகர்வோர் கோர்ட் அனுமதி!

நவி மும்பையில் வசித்து வருபவர் அஜய் மராத்தே. 52 வயதாகும் இவர் லேப்ரடார் ரிட்ரீவர் வகை நாயை வளர்த்து வருகிறார். இவர் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஐந்தாவது தளத்தில் வசித்து வருகிறார்.
12 வயதாகும் தனது நாய் ஷிமுவை தினசரி காலையும், மாலையும் வாக்கிங் அழைத்துச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நாய்க்கு வயதாகி விட்டதால் மாடிப்படிகளில் ஏற்றி, இறக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள லிப்ட்டை பயன்படுத்த முடிவு செய்தார்.
ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்போர் சங்கம் அதற்குத் தடை போட்டு விட்டது. பலமுறை கோரிக்கை விடுத்தும் சங்கம் இறங்கி வராததால், வேறு வழியின்றி மும்பையி்ல உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார் மராத்தே.
அவர் தாக்கல் செய்த மனுவில், எனது நாய் மிகவும் வயதானது. கடந்த 3 ஆண்டுகளாக அதற்கு மூட்டு வலியும் உள்ளது. எனவே மாடிப்படிகளில் ஏறி இறங்க முடியாது.
எனக்கும் வயதாகி விட்டது. எனவே என்னால் 35 கிலோ எடையுள்ள ஷிமுவை தூக்கிக் கொண்டு ஏறி, இறங்க முடியாது.
எனவே லிப்ட்டைப் பயன்படுத்த முடிவு செய்தேன். ஆனால் சங்கம் தடை போட்டு விட்டது. அந்தத் தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
நவி மும்பை நுகர்வோர் கோர்ட் இதை விசாரித்த, மராத்தே, தனது நாயை லிப்ட் மூலம் கொண்டு செல்ல உத்தரவிட்டனர்.
மேலும், நாயை லிப்ட்டில் ஏற்ற அனுமதி மறுத்த குடியிருப்பு சங்கத்திற்கு ரூ. 5000 அபராதமும் விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications