50 லட்சம் ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

Subscribe to Oneindia Tamil

Pink Rose
சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு 'தாஜ்மஹால்' ரோஜா உள்ளிட்ட 50 லட்சம் ரோஜாக்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக டிட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

காதலை சொல்லும் யுக்திகளில் ஒன்று ரோஜா பூ. காதலர் தினத்தன்று நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் ரோஜா பூவுக்கு ஏகப்பட்ட் கிராக்கி ஏற்படுகிறது.

இதை நன்றாக புரிந்து கொண்ட தமிழக அரசு நிறுவனமான டிட்கோ மற்றும் எம்என்ஏ அமைப்பு இணைந்து டேன்புளோரா என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி, ஓசூர் தாலுகாவில் உள்ள அமுதாகொண்டபள்ளி என்ற இடத்தில் பெரிய ரோஜா தோட்டத்தை உருவாக்கியுள்ளது.

அங்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்பட்டு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் இங்கு 1.2 கோடி ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

இந்த ஆண்டில் உற்பத்தி 2.5 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஒரு பகுதியை காதலர் தினத்தை முன்னிட்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஹாலந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

காதலர்களால் அதிகம் விரும்பப்படும் கருஞ்சிவப்பு நிறத்தில் கருப்பு கோடுகளுடன் கூடிய ரோஜாவுக்கு தாஜ்மஹால் என பெயரிட்டுள்ளது.

இந்த வகை ரோஜாக்களுக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+