காந்தி கண்ணாடி, வாட்ச், செருப்பு: திட்டமிட்டபடி ஏலம் - அமெரிக்கர்
டெல்லி: மகாத்மா காந்தியடிகளின் கண்ணாடி, பாக்கெட் வாட்ச், செருப்பு, தட்டு, கிண்ணம் உள்ளிட்டவற்றை திட்டமிட்டபடி ஏலம் விடுவேன். இவற்றை ஏலம் விடக் கூடாது என இந்திய அரசு விரும்பினால், இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் நலனுக்காக 5 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும் என அமெரிக்கரான ஜேம்ஸ் ஓடிஸ் திட்வடட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஓடிஸ். இவரிடம் காந்தியடிகள் பயன்படுத்தி மூக்குக் கண்ணாடிகள், பாக்கெட் வாட்ச், ஒரு ஜோடி செருப்பு, ஒரு தட்டு, கிண்ணம் ஆகியவை உள்ளன.
இவற்றை நியூயார்க்கைச் சேர்ந்த ஆன்டிகோரம் என்ற ஏல நிறுவனத்தின் மூலம் மார்ச் 5ம் தேதி ஏலம் விடவுள்ளார்.
இதையடுத்து இந்திய அரசு, ஓடிஸுக்குக் கண்டனம் தெரிவித்தது. காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடக் கூடாது என அது கூறியது. மேலும், ஆன்டிகோரம் நிறுவனத்தை அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தொடர்பு கொண்டு ஏலத்தை நடத்தக் கூடாது என கோரிக்கை விடுத்தார்.
ஆனால் திட்டமிட்டபடி ஏலம் நடைபெறும் என ஆன்டிகோரம் கூறியுள்ளது. அதேபோல நிச்சயம் காந்தியின் நினைவுப் பொருட்களை ஏலத்திற்குக் கொண்டு வருவேன் என்று ஓடிஸும் கூறியுள்ளார்.
அதேசமயம், இந்தியா விரும்பினால் இந்தப் பொருட்களைத் திருப்பித் தரத் தயார். ஆனால், இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் நலனுக்காக ஐந்து சதவீத நிதியை இந்திய அரசு ஒதுக்க வேண்டும். அப்படிச் செய்தால் நான் இவற்றைத் திருப்பித் தருகிறேன் என்று கூறியுள்ளார் ஓடிஸ்.
இந்திய அரசுத் தரப்பிலிருந்து தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஓடிஸ் தெரிவித்துள்ளார்.
இப்படி அனைத்து வழிகளிலும் காந்தியின் பொருட்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹோட்டல் அதிபரான சந்த் சிங் சத்வால் என்பவரை இந்திய அரசு அணுகியுள்ளதாக தெரிகிறது. அவர் மூலம் இந்தப் பொருட்களை ஏலம் எடுத்து அவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வர இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications