'களங்கரை விளக்கம் ஜெ'-கனடா தமிழ் பட்டதாரிகள் அமைப்பு
மார்கம்: உறவுகளை இழந்து கடலில் வீழ்வதைத் தவிர வேறு வழியின்றி நின்ற தமிழ் ஈழ மக்களுக்கு ஜெயலலிதா ஒரு கலங்கரை விளக்காக நிற்பதாக கனடா பல்கலை. தமிழ் பட்டதாரி கழகம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களுக்கா ஆதரவாக பேசி வரும் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கனடா பல்கலைகழக தமிழ் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் லோகீசன் கதிர்வேல் பிள்ளை கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில்,
மதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய அன்னை ஜெயலலிதாவிற்கு,
கனடிய பல்கலைக்கழக தமிழ் பட்டதாரிகளின் பணிவான அன்பு வணக்கங்கள் ஈழத்தமிழர் துயர் கண்டு வெடித்த உங்கள் உணர்வு கண்டு கண்ணீரோடு நம்பிக்கை கொண்டு எழுதும் மடல்.
ஈழத்திலும் தாய் தமிழகத்திலும் உள்ள எட்டுக் கோடித் தமிழர்களின் வாழ்க்கையில் உங்கள் பேச்சு நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளது. கடவுள் கூடக் கைவிட்ட ஈழத்தமிழருக்கு உங்கள் அன்புக்கரங்கள் நம்பிக்கையூட்டி நிற்கின்றது.
ஒவ்வொரு தாய் தமிழக உறவுகளிற்கும் ஈழத்தமிழரின் அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளீர்கள். எமது மனமார்ந்த நன்றிகள்.
உறவுகளை இழந்து கடலில் வீழ்வதைத் தவிர வேறு வழியின்றி நின்ற தமிழீழ மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக நிற்கின்றீர்கள்.
செய்வதை சொல்லும் தலைவி...
ஈழத் தமிழராகிய எமக்கு உங்கள் சொல்லின் மேல் அளவு கடந்த நம்பிக்கையுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் செய்வதைச் சொல்லும் தலைவியாக நீங்கள் ஒருவர் மட்டுமே திகழ்கின்றீர்கள். மேலும், சொல்லிலும் செயலிலும் நேர்மையாகவே இதுவரை காலமும் வாழ்ந்துள்ளீர்கள்.
உங்கள் பதவிக்காலத்தில் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி அவர்கள்தம் வாழ்க்கையை வளம்படுத்த உதவினீர்கள்.
எங்கள் அனைவர்க்கும் “ஈழத்தை அமைப்பேன்"; என்னும் உங்கள் கணீர் குரல் தான் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் காக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது.
விடிவாக உங்கள் வாக்கு ஒலிக்கிறது...
தலைமுறை தலைமுறயாக எம்மக்கள் பட்ட சொல்லொனா துயரத்திற்கு விடிவாக உங்கள் வாக்கு ஒலிக்கிறது. “காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தில் மாணப் பெரிது" எனும் வள்ளுவர் வாக்கிற்கேற்ப காலத்தால் செய்தற்கரிய பேருதவியை நல்கி நிற்கின்றீர்கள்.
உங்களை தமிழ் உலகம் காலம் உள்ள வரை நன்றி கூறி நிற்கும். இவ் உலகத்தால் காக்க முடியாத லட்சக்கணக்கான மக்களை இன அழிப்பில் இருந்து காத்து தாய்மையின் முழு வடிவமாய் தமிழர் வரலாற்றில் என்றும் வாழ்வீர்கள். உங்கள் அன்பிற்கும் பண்பிற்கும் மனமார்ந்த நன்றிகள் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications