'ஸ்டைலான அரசியல்வாதிகள்' ராகுல், ஹேமாமாலினி!

இந்திய அரசியலுக்கும், வசிகரமானவர்களுக்கும் அதிக தொடர்பு உள்ளது. மக்களிடமும் இவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இதனால் தான் நடிகர், நடிகைகளுக்கு அரசியலில் ஒவ்வொரு கட்சியிலும் அறிவிக்கப்படாத தனி இடஒதுக்கிடே உண்டு என சொல்லும் அளவுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சண்டீகரை சேர்ந்த நிறுவனம் ஒன்று நாடு முழுவதும் உள்ள 156 பேஷன் டெக்னாலஜி கல்லூரிகளில் பயிலும் 14 ஆயிரம் மாணவ, மாணவிகளிடம் கருத்து கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. அவர்களிடம் தற்போதிருக்கும் அரசியல்வாதிகளில் வசிகரமான ஆண் அரசியல்வாதி யார், பெண் அரசியல்வாதி யார் என கேள்வி கேட்கப்பட்டது.
அந்த கருத்து கணிப்பின் முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில்,
இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 90 சதம் பேர் பெண்கள். ஆண்கள் அரசியல்வாதிகளில் வசிகரமானவர் என்ற பெருமையை ராகுல் காந்தி பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக 50 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது இடத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாஜக எம்.பி.யுமான சித்து பெற்றுள்ளார். அவருக்கு 20 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இவர்களை தவிர்த்து காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவுக்கு 11 சதவீதம் பேரும், காங்கிரஸ் எம்பிக்கள் சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்தய சிந்தியா ஆகியோருக்கு தலா 9 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
பட்டு புடவையில் அசத்தும் ஹேமாமாலினி...
பெண்கள் பிரிவில் கவர்ச்சியான அரசியல்வாதியாக ஹேமாமாலினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரசாரத்தின் போது அவர் அணிந்து வரும் அடர்த்தியான நிறம் கொண்ட காஞ்சிபுரம் பட்டு புடவை தங்களுக்கு ரொம்ப பிடித்திருப்பதாக அவர்கள் கருத்து கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹேமாமாலினிக்கு 47 சதவீதம் பேரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 31 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். நடிகை ஜெயபிரதாவுக்கு 10, முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவுக்கு 7 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு 5வது இடம்...
அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவை 5 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ளனர் என அந்த கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications