உயர் கல்விக்கு ஏங்கும் நெல்லை மாணவர்...
அம்பை: அம்பை அருகே பத்தாம் வகுப்பில் 464 மதிப்பெண் பெற்ற மாணவர் ஒருவர் போதிய வசதியில்லாமல் மேற்படிப்பு படிக்க மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். அவரது படிப்புக்கு தொண்டு நிறுவனங்கள் அல்லது வசதி படைத்த நல்ல உள்ளங்கள் உதவ வேண்டும்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே அரிகேசநல்லூர் கிராமம் ஹரிகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் முருகன். சவரத் தொழிலாளி. இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவரது மகன் சண்முகவேல் தன்னுடைய தாய் மதியானந்தத்துடன் வசித்து வருகிறார். மதியானந்தம் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். சண்முகவேல் பத்தாம் வகுப்பு வரை தன்னுடயை அக்கா கணவரின் உதவியால் படித்தார்.
அவர் 10ம் வகுப்பு பொது தேர்வில் பாடவரியாக தமிழ்-87, ஆங்கிலம்-86, கணக்கு 97, அறிவியல் 98, சமூக அறிவியல் 96 என மொத்தம் 500க்கு 464 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அதிக மதிப்பெண் பெற்ற சண்முகவேல் தான் பாலிடெக்னிக்கில் சேர்ந்து சிவில் இஞ்சினியரிங் படிக்க ஆசைபடுவதாக கூறுகிறார். ஆனால் பண வசதியில்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications