குற்றாலத்தில் சூடு பிடிக்கும் சீசன்!
குற்றாலம்: குற்றாலத்தில் சீசன் 2 வாரங்களாக அசத்தி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குற்றாலத்தில் கடந்த இரண்டு வாரங்களில் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் அனைத்து நாட்களும் சாரலுடன் சீசன் அசத்தி வருகிறது. நேற்று மதியம் வரை சாரல் இல்லை. அதன்பின்னர் சற்று இதமாக சூழல் நிலவியது.
ஐந்தருவி பகுதியில் சற்று லேசான சாரல் பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டி மேக கூட்டங்கள் தவழ்ந்து சென்றன. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, செண்பகாதேவி அருவி ஆகியவற்றில் தண்ணீர் நன்றாக கொட்டியது. ஜூலை மாதம் துவங்கியது முதல் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது.
நேற்று குற்றாலத்தில் விடுமுறை தினங்களில் உள்ளது போல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் சுற்றுலா பயணிகள் வரிசையி்ல் நின்று குளித்தனர். ஐந்தருவியில் ஆண்கள் மட்டும் வரிசையில் நின்று குளித்தனர்.
தடாகத்தில் மூழ்கி வாலிபர் பலி
இதற்கிடையே பழைய குற்றாலத்தில் உள்ள தடாகத்தில் மூழ்கி திருமங்கலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியானார்.
திருமங்கலம் எம்ஜிஆர் சோழவந்தான் ரோட்டை சேர்ந்தவர் சோணமுத்து மகன் ரவிகுமார். லோடுமேன். அதே பகுதியை சேர்ந்த சித்தரைவேலு மகன் செல்வம். மோகன் மகன் கருப்பையா ஆகியோர் குற்றாலத்திற்கு வந்தனர்.
அவர்கள் மெயின் அருவியில் குளித்து விட்டு பழைய குற்றாலத்திற்கு சென்றனர். அங்கு அருவியில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் மலை பகுதிக்கு சென்றனர்.
பழைய குற்றால அருவிக்கு மேல் சிறிய அருவி மற்றும் தடாகம் உள்ளது. அந்த அருவியை ரவிக்குமார் பார்த்து ரசித்துள்ளார்.. அப்போது அவர் தவறி தடாகத்தில் விழுந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை
இதனையறிந்ததும் கருப்பையா ஓடிவிட்டாராம். செல்வம் குற்றாலம் போலீசில் தகவல் கூறினார். போலீசார் மற்றும் தென்காசி தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) மாடசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கோட்டூர் சாமி, சண்முகவேல், செல்வம், முருகன், விரைந்து சென்று தடாகத்தில் தேடினர். ஆனால் ரவிகுமாரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து தேடுதல் பணி நடந்தது. இந்நிலையில் தடாகத்தி்ன் ஓரத்தில் ரவிகுமார் உடல மிதந்தது.
போதிய வெளிச்சம் இல்லாததாலும், வனப்பகுதி என்பதாலும், இரவு ரவிகுமார் உடலை கொண்டு வர முடியவில்லை.
இன்று காலையில் அவரது உடல் மீட்கப்பட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனை நடத்தப்படும். இதுகுறித்து குற்றாலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications