வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை-ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் ஸ்டாலி்ன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அருகே துபாயைச் சேர்ந்த ஹர்ஷா குழுமம் கண்ணாடிகள் மற்றும் எண்ணெய் துரப்பனக் கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது.
ரூ. 1,500 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்தத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் டிசம்பரில் நடக்கிறது. 2011ம் ஆண்டில் தனது உற்பத்தியை இந்த நிறுவனம் தொடங்கவுள்ளது.
இந் நிலையில் சென்னை அருகே தொழிற்சாலைக்கான இடத்தைத் தேர்வு செய்வது குறித்து இந் நிறுவனத்தின் தலைவர் அருண் மிராண்டா தலைமையிலான அதிகாரிகள் இன்று துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று பகுதிகளி்ல் உள்ள இடங்களைக் குறிப்பிட்டு அதில் ஓரிடத்தில் தொழிற்சாலையை தொடங்க உதவ வேண்டும் என்று கோரினர்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின், தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் தமிழக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னிரிமை தருமாறு கேட்டுக் கொண்டார்.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய அருண் மிராண்டா, இந்தத் தொழிற்சாலை மூலம் நேரடியாக 1,200 வேலைவாய்ப்புகளும் மறைமுகமாக 1,500 வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
இதில் ஸ்டாலினின் கோரிக்கைப்படி தமிழக வாலிபர்களுக்கே இங்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications