அருவிகளில் வெள்ளம்- குற்றாலத்தில் குளிக்க தடை
குற்றாலம்: தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் காலம் முடிந்த பின்பும் அருவியில் தொடர்ந்து தண்ணீர் விழுந்து வருகிறது. கடந்த சில தினங்களாக குற்றாலம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று அதிகமாக தண்ணீர் கொட்டும் ஐந்தருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
இவர்கள் புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்தனர்.
இரண்டாம் கட்ட சீசன் அருமையாக உள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவியில் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.
ஐந்தருவியில் உள்ள ஐந்து கிளைகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.
பாபநாசம், சேர்வலாறு அணை நீர்மட்டம் உயர்வு
மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக பருவமழை ஏமாற்றியதால் பிரதான பாசன அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரை குடிநீர், பாசன தேவையை நிறைவு செய்ய முடியுமா என்ற அச்சம் நிலவி வந்தது.
இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
மேற்குதொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 38.50 அடியாக இருந்து பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 42.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2283 கன அடி தண்ணீர் வருகிறது.
இதே போல் 51.90 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை 52.10 அடியாக இருந்த சேர்வலாறு அணை 64.97 அடியாகவும், 40 அடியாக இருந்த கடனா அணை 43.50 அடியாகவும் 49 அடியாக இருந்த ராமநதி அணை 51 அடியாகவும் உயர்ந்துள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications