அண்ணா நூற்றாண்டு விழா-பெரியார் புத்தகக் கண்காட்சி
காஞ்சிபுரம்: அண்ணா நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 12 இடங்களில் பெரியார் புத்தகக் கண்காட்சி நடக்கிறது.
திராவிடர் கழகம், பெரியார் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன.
காஞ்சிபுரத்தில் இந்த புத்தகத் திருவிழாவை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில்,
பெரியாரின் கொள்கைகளை அண்ணா எழுத்தாலும், பேச்சாலும், செயலாலும் உலகம் முழுவதும் கொண்டு சென்றார்.
தனது ஆட்சியையே பெரியாருக்குக் காணிக்கையாக சமர்ப்பித்தார். பெரியாரின் கொள்கைகளை நாடகமாக வடிவமைத்து தானே நடித்து மக்களிடம் பிரசாரம் செய்தார்.
புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படும். கண்காட்சியில் மாலை நேரத்தில் பட்டிமன்றம், மாணவ, மாணவியர் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி மற்றும் வீதி நாடகம் உள்ளிட்டவை வரும் 12ம் தேதி வரை நடக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் கலந்து கொண்டு ரூ. 1 லட்சத்துக்கு புத்தகங்களை வாங்கினார்.
ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் கண்காட்சியை கண்டு களித்தனர்.












Click it and Unblock the Notifications