போர்ட்பிளேரில் விரைவில் திருவள்ளுவர் சிலை திறப்பு

போர்ட் பிளேரில் நான்கு நாள் உலக திருக்குறள் மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாட்டையொட்டி போர்ட் பிளேரில் 6.5 அடி உயரமுடைய திருவள்ளுவர் சிலை திறக்கப்படவுள்ளது.
நவம்பர் 7ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த சிலையை மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைக்கவுள்ளார்.
இதுகுறித்து விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி. சந்தோஷம் கூறுகையில், ஒரு மாதத்திற்கு முன்பு நான் போர்ட் பிளேர் போயிருந்தபோது, திருவள்ளுவர் சிலை அமைக்க தங்களுக்கு ஓராண்டுக்கு முன்பே அனுமதி கிடைத்து விட்டதாகவும், சிலையை வழங்கி உதவ வேண்டும் எனவும் அந்தமான் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் சிலையை செய்து அன்பளிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. தற்போது நாகர்கோவிலில் சிலை தயாராகி வருகிறது. முடிந்ததும் போர்ட் பிளேருக்கு அனுப்பி வைக்கப்படும்.
நவம்பர் 7ம் தேதி நடைபெறும் விழாவின்போது இந்த சிலையை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைக்கிறார் என்றார்.
ஹாடோ என்ற இடத்தில் போர்ட் பிளேர் துறைமுகத்திற்கு எதிரே சிலையை நிறுவிக் கொள்ள போர்ட் பிளேர் நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளதாம். சென்னை, விசாகப்பட்டனம், கொல்கத்தா ஆகிய நகரங்களிலிருந்து கப்பல் மூலம் வருவோர் இந்த துறைமுகம்தான் நுழைவாயில் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications