கரிசல் திரைவிழா போட்டியில் சிவகாசி கல்லூரி சாம்பியன்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறை சார்பில் நடந்த கரிசல் திரைவிழா போட்டியில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தொடர்பியல் துறை மாணவர்கள், மனோ கிளப் என்ற அமைப்பு உருவாக்கி உள்ளனர்.

இந்த அமைப்பு மூலம் தொடர்பியல் துறையில் படிக்கும் மாணவ, மாணவிகளின் திறமையை வெளிக்கொணரும் வகையில் கரிசல் திரைவிழா என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான கரிசல் திரைவிழா போட்டிகள் கடந்த 3ம் தேதி துவங்கின. இந்த போட்டியில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தேவையற்ற பொருட்களில் இருந்து கலை பொருட்களை உருவாக்குதல், மீடியா குவிஸ், குறும்படம், ஆவணப்படம், புகைப்படம், நாட்டுப்புற நடனம், விளம்பரம் தயாரித்தல், அனிமேஷன் கிராபிக்ஸ், சினிமா விமர்சனம் உள்பட பல்வேறு போ்ட்டிகள் நடத்தப்பட்டன.

கரிசல் திரைவிழாவின் நிறைவு விழா மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.

மாணவி அனுஷியா வரவேற்றார். தொடர்பியல்துறை கோவிந்தராஜூ தலைமை வகித்தார். சேலம் பெரியார் பல்கலை கழக தொடர்பியல்துறை தலைவர் நடராஜன் வாழ்த்தி பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலநது கொண்ட பதிவாளர் மாணி்க்கம் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி அதிக புள்ளிகள் பெற்று ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

திருச்சி ஈ.வெ.ரா அரசுக் கல்லூரி அணி இரண்டாவது பரிசை தட்டிச் சென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+