மஸ்கட்டில் மானும் மயிலும் ஜோடியாட - மாபெரும் கலை நிகழ்ச்சி
மஸ்கட் மானும் மயிலும் ஜோடியாட என்ற பெயரில் மாபெரும் கண்கவர் கலை நிகழ்ச்சி மஸ்கட்டில் நடைபெறவுள்ளது.
அணல் பறக்கும் ஏப்ரல் மாதத்தில் குளிர் பரப்பும் வகையில் இந்த ஜில் ஜில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சமீர் உஸ்மான் டிரேடிங் எல்எல்சி நிறுவனத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 16ம் தேதி மாலை மஸ்கட்டில் உள்ள மிகப் பெரிய திறந்த வெளி கலையரங்கில் (குரம் ஆம்பிதியேட்டர்) இந்த கண்கணவர் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நடனம், காமெடி, பாடல்கள், மிமிக்ரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறுகின்றன. மஸ்கட்டில் வசிக்கும் தமிழ் மக்களுக்காக இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியைக் காண தமிழர்கள் மட்டுமல்லாமல், தென்னிந்தியர்களும் பெரும் திரளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமே நமீதாதான். கலைச்செல்வன் டிங்கு தலைமையில் சின்னத்திரை நடிகர், நடிகையர் பட்டாளம் ஒன்றும் நிகழ்ச்சிக்காக வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி ஆகியவற்றில் நடித்து வருபவர்கள் இவர்கள்.
விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் புகழ் நேத்திரன், பிரியதர்ஷனி, தீபக், கலைஞர் டிவியின் மானாட மயிலாட புகழ் சஞ்சீவ், சண்டி, பிரியா, தர்ஷினி, ரஜினி, சன் டிவி புகழ் தேவிப்பிரியா, கிருத்திகா, கவி ஆகியோர் இவர்களில் சிலர்.
டெம்பிள் ஆப் டான்ஸ் டீம் குழுவைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள், பாடகர்கள் நபருன் கோஷ், பிரீத்தா ஆகியோரும் நிகழ்ச்சியை கலகலப்பாக்கவுள்ளனர்.
மிமிக்ரி கலைஞர் திவாகர், விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு புகழ் ரோபோ சங்கர், அரவிந்த் ஆகியோரும் மிமிக்ரி உள்ளிட்ட கலை விருந்து படைக்கவுள்ளனர்.
இந்த மாபெரும் கலை விருந்தை சுவைக்க தமிழர்களும், தென்னிந்தியர்களும் பெரும் திரளாக திரண்டு வர வேண்டும் என விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications