கூத்தாண்டவர் கோவில் திருவிழா -இன்று தாலி கட்டும் நிகழ்ச்சி
விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாலை பந்தலடியில் முக்கிய பிரமுகர்களுக்கு தாலி கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் திருவிழா தொடங்கியுள்ளது.
இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடைபெறும் இந்த திருவிழாவில், பல மாநிலங்களில் இருந்தும் அரவாணிகள் வந்து கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு, சித்திரை திருவிழாவின் துவக்க நாளான நேற்று கூவாகம், நத்தம், சிவலிங்ககுளம், கொரட்டூர், வாணியங்குப்பம், தொட்டி ஆகிய கிராம மக்கள் மேள, தாளங்கள் முழங்க கூழ் கலயங்களுடன், ஊர்வலமாக வந்தனர்.
கூத்தாண்டவர் கோவில் பின்னால் உள்ள மாரியம்மன் கோவில் முன்பாக கூடி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்தனர். பின்பு பக்தர்கள் எடுத்து வந்த கூழ் ஒன்றாக கலந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில், கோவில் செயல் அலுவலர் பத்ராச்சலம், பூசாரி கூத்தான், ஊராட்சி தலைவர் கூத்தையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் விழாவான இன்று மாலை பந்தலடியில் முக்கிய பிரமுகர்களுக்கு தாலிகட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications