நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய கட்டிடம்: ஸ்டாலின் அடிக்கால் நாட்டல்
நெல்லை: நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அரசு பொறியியல் கல்லூரி வாளகத்தில் ரூ. 7.5 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கு இன்று துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுபாட்டின் கீழ் 434 சுய நிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக நெல்லை, கோவை, திருச்சி ஆகிய மண்டலங்களாக கடந்த 2007-ம் ஆண்டு பிரிக்கப்பட்டது.
நெல்லை அண்ணா பல்கலைக்கழக அலுவலகம் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வாளகத்தில் இயங்கி வருகிறது. இதன் கட்டுபாட்டின் கீழ் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் 67 சுய நிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக சென்னை
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் காளியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பி.இ. பட்டபடிப்பு வகுப்புகள் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
எனவே, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கான மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வாளகத்தில் ரூ.7 கோடியே 44 லட்சம் செலவில் நிர்வாக அலுவலகம், புதிய வகுப்பறைகள கட்டப்படுகின்றன.
அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications