புர்க்காவுக்கு விதிக்கப்பட்ட தடை சரியே-பிரான்ஸ் அரசியல் சாசன சபை

பெண்களின் உரிமையைக் காக்க இந்த தடையைப் பிறப்பிப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது மத சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முன்பு இந்த தடை உத்தரவு குறித்து கருத்து தெரிவித்திருந்த அரசியல் சாசன சபையானது, இது சட்டவிரோதமாக அமையும் வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தது. ஆனால் தற்போது தடை தொடர்பான சட்டத்தை அது ஏற்றுக் கொண்டுள்ளது. அதேசமயம், இந்த சட்டத்தை அமல்படுத்தலாம், ஆனால், கட்டாயப்படுத்தி இதை அமல்படுத்தக் கூடாது என்றும் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. அதாவது பொது இடங்களில் புர்க்கா அணியக் கூடாது. ஒரு வேளை யாராவது அணிந்து வந்தால் அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி புர்க்காவை அகற்ற முயலக் கூடாது என்பது இதன் அர்த்தம்.
தற்போது இந்த சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் ஏற்று நிறைவேற்றியுள்ளன. அடுத்த ஆண்டு முதல் இந்த சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
இந்ததீர்ப்பை பிரான்ஸ் பிரதமர் பிரான்காய்ஸ் பில்லான் வரவேற்றுள்ளார்.
புதிய சட்டப்படி பொது இடங்களான, போக்குவரத்து, அரசுக் கட்டடங்கள், தெருக்கள், மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், தனியார் கட்டடங்கள், பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவற்றுக்கு வரும்போது புர்க்கா அணிந்து வரக் கூடாது.
மீறி அணிந்து வந்தால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதேபோல எந்த ஆணாவது ஒரு பெண்ணை புர்க்கா அணிய கட்டாயப்படுத்தினால் அவருக்கு 30 ஆயிரம் யூரோவும், ஒரு வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
பிரான்ஸ் அரசின் இந்த தடை உத்தரவுக்கு முஸ்லீம்கள் மட்டுமல்லாமல், பிரான்ஸ் எதிர்க்கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய மனித உரிமை சட்டத்திற்கு விரோதமானது என்று அவை சாடியுள்ளன.












Click it and Unblock the Notifications