29-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா தொடக்கம்: 11 நாட்கள் விழா
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இத் திருவிழா 29-ம்தேதி தொடங்கி அடுத்த மாதம் 9-ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும்.
கொடியேற்றத்தையொட்டி வரும் 29-ம் தேதி அதிகாலை 1 மணி அளவில் திருக்கோவில் நடைதிறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறவுள்ளது. 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். இதைத் தொடர்ந்து மற்ற பூஜை காலங்கள் நடைபெற இருக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக செப்டம்பர் 2-ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேலக்கோவிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. செப்டம்பர் 4-ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருக்கோவிலில் கடக லக்கனத்தில் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நடைபெறவிருக்கிறது.
அன்று காலை 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் சண்முகவிலாச மண்டபத்தில் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தந்த பிறகு பிள்ளையன் கட்டளை மண்டபத்தை அடைகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கின்றது.
மாலை 4 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வருகின்றார்.
செப்டம்பர் 5-ம் தேதி அதிகாலை சுவாமி பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு சுவாமி பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
செப்டம்பர் 7-ம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் திருக்கோவில் கலையரங்கில் காலையும், இரவிலும் திருமுறை இன்னிசை, பக்தி சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications