பாளையில் இன்று கலை இலக்கிய திருவிழா
நெல்லை: பாளையங்கோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பி்ல் கலை இலக்கிய பெருவிழா இன்று இரவு துவங்கி விடிய விடிய நடக்கிறது.
இதுகுறித்து இந்திய கலச்சார நட்புறவுக்கழக தேசிய கவுன்சில் உறுப்பினர் சேவியர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற 8வது மாவட்ட மாநாடு இன்று காலை 10 மணிக்கு பாளை சுபம் திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாவட்ட தலைவர் வானம்பாடி சங்கர் தலைமை வகிக்கிறார். மாநிலத் தலைவர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் துவக்கி வைக்கிறார்.
எழுத்தாளர் பொன்னீலன், மாநில செயலாளர் ரவீந்திர பாரதி பங்கேற்கின்றனர். புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது.
பின்னர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், இந்திய கலச்சார நட்புறவு கழகம் சார்பில் மாலை 6 மணி்க்கு பாளை மார்க்கெட் மைதானத்தில் கலை இலக்கிய திருவிழா 2010 துவங்குகிறது.
முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முரசு கொட்டி துவக்கி வைக்கிறார். டாக்டர் ராமகுரு தலைமை வகிக்கிறார். செண்டை மேளம், கிராமிய இசை, பரதநாட்டியம, ஓயிலாட்டம், காவடியாட்டம், பறையாட்டம், கரகாட்டம், களியாட்டம், சிலம்பாட்டம், பொய்கால் குதிரையாட்டம், நிஜ நாடகங்கள், கமெடி கலாட்டா, கவிதை வாசிப்பு, ஆவணப்படம் திரையிடுதல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்டுபாட்டு குழு தலைவர் நல்லகண்ணு, மதிமுக மாநில துணை பொது செயலாளர் நாஞ்சில் சம்பத் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications