பாரிஸ் கம்பன் கழக மகளிரணி விழா
இந்தியத் தூதரக அதிகாரி நாராயணன், அவரது துணைவியார் பிரியா நாராயணன் ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.
பிரான்சு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன் இறைவேட்டலைப் பாடினார். அடுத்து செல்வி சக்தி பார்த்தசாரதி தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார்.
மகளிரணித் தலைவி இராசேசுவரி சிமோன் அனைவரையும் வரவேற்றார்.நிகழ்சிகளை பிரபா அசோகன் தொகுத்து வழங்கினார்.
செல்வி சார்ச ரவீந்திரநாதன், செல்வி கிளமேன்சி இரமேசு, செல்வி சான்சி இரமேசு மூவரும் இணைந்து அழகிய நடன நிகழ்ச்சியை வழங்கினர்.
சமூகச் சேவையாளர் லலிதா பத்ரிநாத் தலைமை தாங்கினார்.
ஆன்மீகச் செம்மல் அரவிந்தர் பற்றி புலவர் அருணா செல்வம் பேசினார். நாவல்கள், சிறு கதைகள், மரபுப் பாடல்கள் எழுதி வரும் படைப்பாளி இவர்.தொடர்ந்து சில்பா பாலகிருட்டிணனின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
மகளிரணித் தலைவி இராசேசுவரி சிமோன் நடுவராய் அமர, சொற்போர் அரங்கம் நடந்தது.
'இன்று வரை ஆணாதிக்கம் தொடர்வது பெண்களால்தான்' எனப் பெண்களைச் சாடிக் குட்டிக் கதைகள் சில கூறி அமர்ந்தார் ஆதிலட்சுமி வேணுகோபால்.
அடுத்துப் பேசிய கோமதி அரி, 'ஆணாதிக்கம் தொடர்வது ஆண்களால்தான்' என்று நகையும் சுவையுமாக பேசினார்.
ஆணாதிக்கம் தொடர்வது பெண்களாலும் இல்லை ஆண்களாலும் இல்லை, சமூகத்தால்தான் என்று ஆராய்ச்சி பூர்வமாக விளக்கினார் சுகுணா சமரசம்.
அடுத்து லினோதினி சண்முகநாதன் ஒரு படி மேலே போய், சிலப்பதிகாரத்தில் பல மேற்கோள்கள் காட்டி,ஆணாதிக்கம் தொடர்வது இலக்கியத்தால்தான் என்று பேசினார்.
இறுதியாகப் பேச வந்த தனசெல்வி தம்பி, ''எல்லாமே மாயை அதிலும் ஆணாதிக்கம் என்பது வெறும் பெரும மாயைதான்''என்று உரத்துக் கூறியபோது ஏகப்பட்ட வரவேற்பு - வேறு யாரிடமிருந்து ? எல்லாம் ஆண் மக்களிடமிருந்துதான்!
கடைசியாக, 'இனியேனும் ஆணாதிக்கத்தைக் குறைக்க முயல்வோம்' என்று ஒரு வரியில் தன் தீர்ப்பை எழுதினர் நடுவர் இராசேசுவரி சிமோன்.
அடு்த்ததாக செல்வி முத்து லிசா செயசிறீ, செல்வன் ச்தாலன் அசுவின் ஆகிய சிறார்கள் பிசிறில்லாத வயலின் இசையை வாரி வழங்கினர் தொடர்ந்து
சரோசா தேவராசு, பூங்குழலி பெருமாள் & குழுவினர் அளித்த வில்லுப் பாட்டு மகளிரணி விழா மகுடத்தில் பதித்த வைரமாக அமைந்தது.
பின்னர் டிக் சந்தியா, ராசி, செல்வதாரிணி, சக்ரசு டெரோட்டா, பிரிதா டெரோட்டா அளித்த கண்ணுக்கினிய கோலாட்ட நடனம் அனைவரையும் கவர்ந்தது.
முத்தாய்ப்பாக நடைபெற்ற வினாடி வினா போட்டி, முத்தான நிகழ்ச்சியாக அமைந்தது. வினாக்களையும் விடைகளையும் தயார் செய்திருந்தவர் லூசியா லெபோ.
அவரோடு சேர்ந்து பிரபா அசோகன் கேள்விகளைப் பகிர்ந்துகொண்டு கேட்க, பங்கெடுக்க வந்திருந்த மகளிர் பத்துப் பேர் உற்சாகமாகப் பதில் தந்தனர்.
பங்கெடுத்த அனைவருக்கும் பொனாடை, பரிசுகள் வழங்கி மகிழ்ந்தது மகளிரணி. வந்தவர்களுக்குச சுவையான சிற்றுண்டி வழங்கும் பொறுப்பை ஏற்றுச் சிறப்பாகச் செயல்பட்ட குணசுந்தரி பாரதிதாசன் பாராட்டுக்குரியவர்.
இடையே, பிரான்சு கம்பன் கழகத்தின் பொதுச் செயலாளர் செவாலியே யூபர்ட் சிமோனின் பிறந்த நாளும் கேக்கை வெட்டி கொண்டாடப்பட்டது.
இறுதியாகத் ஆதிலட்சுமி வேணுகோபால் நன்றி உரை கூற பிரான்சு மகளிரணி விழா இனிதே நிறைவுற்றது.
மகளிரணிக்கு தனி வலைப் பூவொன்றை அமைத்துத் தந்து அதன் தொழிநுட்பப் பொறுப்பையும் ஏற்றிருக்கும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்கு நிகழ்ச்சியில் நன்றி தெரிவிக்க்பபட்டது.
தகவல்-படங்கள் : 'புதுவை எழில்'- பிரான்ஸ்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications