இன்று அட்சய திரிதியை- நகை வாங்க மக்கள் அலை மோதல்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அட்சய திரிதியை என்பது ஒரு சாதாரண சுப நாளாகவே இருந்து வந்தது. ஆனால் ஆடி மாதத்தை எப்படி ஜவுளிக் கடைக்காரர்கள் தள்ளுபடி விலை கொடுத்து பிரபலமாக்கி மக்களின் பர்ஸ்களை காலி செய்தனரோ, அதேபோல நகைக்கடைக்காரர்களும் அட்சய திரிதியை தினத்தை பிரபலமாக்கி மக்களின் பர்ஸ்களை மேலும் பலவீனமாக்க ஆரம்பித்து விட்டனர்.
இப்போது ஆண்டுதோறும் அட்சயதிரிதியை தினத்தன்று குண்டுமணித் தங்கமாவது வாங்கியாக வேண்டும் என்ற மன நிலைக்கு மக்கள் போய் விட்டனர் - விலை குண்டக்க மண்டக்க உயர்ந்திருந்தாலும்.
ஏப்ரல் 14-ந் தேதிக்கும் மே 14-ந் தேதிக்கும் இடைப்பட்ட சித்திரை மாத வளர்பிறை காலத்தில் 3-ம் பிறை தோன்றும் நாள்தான் அட்சய திரிதியை நாள் என்று அழைக்கிறோம். இந்த நாளில் நல்ல நேரம் பார்த்து நகைவாங்கினால் மேலும் மேலும் நகை வாங்கும் வாய்ப்பும் வசதியும் பெருகும் என்பது ஐதிகம் ஆகும்.
தனலட்சுமி, ஆதிலட்சுமி உள்பட 8 லட்சுமிகளும் அடி எடுத்துவைக்கும் இந்த நாளில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முயற்சி, மற்றும் நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம். இந்த நாள் சக்திவாய்ந்த நாள் என்பதால் தொட்டது துலங்கம். பெண்பார்க்கும் காரியத்தில் இருந்து எந்த காரியத்தை செய்தாலும் மகத்துவம் உண்டு.
சமீப காலமாக பிரபலமடைந்துள்ள இந்த அட்சய திரிதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கலாம். ஆனால் நகைதான் பிரதானமாக வாங்கப்படுகிறது. இதையடுத்து நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.
இந்த ஆண்டும் முன்பதிவு செய்து மக்கள் நகை வாங்க கிளம்பியுள்ளனர். தமிழகத்தின் அனைத்து பிரபல நகைக் கடைகளும் முன்பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி ஈர்த்துள்ளனர்.
வழக்கமாக திறக்கப்படும் நேரத்திற்கு சில மணிநேரங்கள் முன்கூட்டியே நகைக் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் களை கட்டியுள்ளது.
நகைகளுக்கு செய் கூலி சேதாரம் கிடையாது, நகைக்கடை உரிமையாளர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு சலுகைளும் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்த அட்சய திருதியை நாளில் இந்தியா முழுவதும் 45 டன் தங்கம் விற்பனையானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 12 டன் தங்கம் விற்பனையானது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 14 டன் விற்பனையாகும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தற்போது தங்கம் விலை பெரும் உயர்வைச் சந்தித்துள்ளது. இருப்பினும் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருப்பதால் இந்த ஆண்டு நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என நகைக் கடை உரிமையாளர்கள் நம்புகின்றனர்.
அட்சய திருதியை அன்று நகைவாங்க உகந்த நேரம் காலை 7 மணி முதல் 9 மணிவரை, பகல் 11 மணி முதல் 12 மணிவரை, மதியம் 2 முதல் 4 மணிவரை மாலை 6 மணி முதல் 7 மணிவரை, இரவு 9 மணி முதல் 11 மணிவரை என்று தெரிவித்துள்ளனர்.
நகைக் கடைகளுக்கு நிகராக இப்போது வங்கிகளும் கூட நகை விற்பனையில் இறங்கி விட்டன. அதாவது தங்க காசுகளை வங்கிகள் விற்று அவர்களும் அட்சயதிரிதியையை கொண்டாடுகின்றனர். அது மட்டுமல்லாமல் தபால் அலுவலகங்களிலும் தங்க காசு விற்பனை ஜோராக களை கட்டியுள்ளது.
கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று ஒரு பவுன் நகை ரூ.11,024-க்கு விற்பனையானது. இந்த ஆண்டு நேற்று ஒரு பவுன் நகை ரூ.13 ஆயிரத்து 568-க்கு விற்பனையானது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications