129 மூடை பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேருக்கு வலைவீச்சு
கோவில்பட்டி: கோவில்பட்டியில் வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்காக வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 129 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி செல்லத்தாய். இவரது வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையில் மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ எடையுள்ள 8 மூடை ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர். விசாரணையி்ல் அரிசி மூடைகளை மந்திதோப்பு தெருவைச் சேர்ந்த வியாபாரி சுப்பையா என்பவருக்கு விற்க வைத்திருந்தது தெரிய வந்தது.
இதே போன்று பலரிடம் ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி பாலிஷ் செய்து கூடுதல் விலைக்கு விற்று வந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுப்பையாவின் வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர்.
அங்கு தனி அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 121 மூடை ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர். பின்னர் 129 மூடை அரிசியும் மேற்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக செல்லத்தாய் மற்றும் சுப்பையா மீது போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications