Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விழிப்புணர்வு இருந்தால் விதியை வெல்லலாம்

Subscribe to Oneindia Tamil

Breast Cancer Ribbon
மார்பகப் புற்றுநோயும், கருப்பை வாய் புற்றுநோயும் பெண்களை தாக்கும் நோய்களில் மிக முக்கியமானதாகும். உலக அளவில் மார்பக புற்றுநோய் 11.5 லட்சம் பெண்களுக்கு உள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 2.3 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ பரிசோதனை

குறைந்த வயதிலேயே பூப்படைவதும், குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருப்பதுமே பெண்களுக்கான மார்பக புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. 9-வயதுக்குள்ளே பெண்கள் பூப்படைப்டைவதற்கு முக்கிய காரணம் அதிகளவில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் தான். இந்த ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதன் காரணமாத்தான் புற்றுநோய் செல்கள் தோன்றுகிறது.

குறைந்து வயதில் பூப்படையும் பெண்கள் 20-வயதுக்கு மேல் குழந்தைகள் பெற்ற பின் கண்டிப்பாக மருத்துவபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு செய்து கொண்டால் அவர்களுக்கு புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்று முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். அப்போது அவர்களது மார்பகங்களில் ஏதாவது கட்டி தென்பட்டால் அவற்றை கண்டுபிடித்து உடனடியாக அகற்றி அவர்களின் உயிரை காப்பாற்றி விடலாம். இல்லை என்றால் நோய் முற்றி மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இருக்கும் வரை நோயின்றி வாழ சோதனைகள் எடுத்துக்கொள்வது அவசியம்.

தாய்ப்பாலின் அவசியம்

இதே போல் 50 அல்லது 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது நிற்காவிட்டாலும் புற்றுநோய் ஏற்படும். மாதவிடாய் ஏற்படுவதற்கு ஈஸ்ட்ரோஜன் முக்கிய காரணம். இது அதிக அளவில் சுரந்தால் தான் புற்றுநோய் உண்டாகும். எனவே இது போல் உள்ள பெண்களும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.

இதே போல் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு காலை, மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பால் கொடுக்கின்றனர். இது போல் பால் கொடுக்கும் பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும். எனவே குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளும் நன்றாக இருக்கும். தாய்மார்களும் புற்றுநோய் வராமல் தப்பித்து கொள்ளலாம்.

ஆண்களுக்கும் வரும்

மார்பகப்புற்றுநோய் பெண்களைத்தான் அதிகம் தாக்குவதாக கண்டறியப்பட்டது. ஆனால் ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே புகை பிடித்தல் காரணமாகவே ஆண்களுக்கு 15 சதவீதம் மார்பக புற்றுநோய் ஏற்படும் நிலை இருக்கிறது. மேலும் மரபு வழியிலும் மார்பக புற்றுநோய் 15 சதவீதம் வரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஜீன்கள் பி.ஆர்.சி. ஏ-1. பி.ஆர்.சி. ஏ-2 என்று அழைக்கப்படுகிறது. ஒரு வீட்டில் ஏற்கனவே புற்றுநோய் யாருக்காவது இருந்தால் அவர்கள் மேமோகிராபி சோதனை செய்து கொண்டு நோயை தடுக்கலாம்.

மரபு வழி நோய்

மரபு வழியில் வரும் இந்த புற்றுநோயையும் சரியான நேரத்தில் வந்தால் நாம் சரிசெய்து கொள்ளலாம். மேலும் பெண்கள் தங்களது மார்பகங்களில் ஏதேனும் கட்டி தென்பட்டாலோ அல்லது, நீர், ரத்தம், சீழ் முதலியவை வடிந்து வந்தாலோ, இயல்பு நிலையில் இருந்து மாறி இருந்தாலோ, இரு மார்பகங்களில் ஒன்று பெரியதாகவும், ஒன்று சிறியதாகவும் இருந்தாலோ, தடித்து இருந்தாலோ உடனடியாக டாக்ரை அணுகி தேவையான சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேமோ கிராபி சோதனையின் மூலம் பொதுவாகவே நம் கைகளுக்கு தட்டுப்படாத தடிப்புகள், சிறுகட்டிகள் கூட இந்த மேமோ கிராபியில் மிக துல்லியமாக தெரிந்து விடும். எனவே 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை செய்து கொண்டால் மார்பக புற்றுநோயை மிக ஆரம்ப கட்டத்திலேயே கண்டு பிடிக்க முடியும். அதனால் அவர்கள் நவீன சிகிச்சை முறைகளால் மற்ற பெண்களை போல இயல்பான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் பெற முடியும்.

சூரிய ஒளி சிகிச்சை

தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி உடல் மேல் பட்டால் மார்பக புற்றுநோய் வரவே வராது என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: சூரிய ஒளி உடல் மேல் படும் போது வைட்டமின் டி உற்பத்தி தூண்டப்படுகிறது. மார்பக செல்கள், வைட்டமின் டியை ஒருவித ஹோர்மோனாக மாற்றும் திறன் பெற்றவை. இந்த ஹோர்மோன் தான் மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம், நடுத்தர மற்றும் வயதான பெண்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி உடல் மேல் படும் படி பார்த்துக் கொண்டால் மார்பக புற்றுநோய் ஆபத்தில் இருந்து விடுபடலாம். ஆண்களை பொறுத்தவரை வைட்டமின் டி மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் இருந்து காக்கிறதாம்.

உயிரிழப்பு குறைவு

இந்தியாவை காட்டிலும் அமெரிக்காவில் அதிகளவில் நோய் தாக்கப்பட்டு இருந்தாலும், அங்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் மட்டுமே மரணம் அடைகிறார்கள். இதற்கு காரணம் மார்பகப் புற்றுநோய் பற்றி அமெரிக்க பெண்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சிதான். அங்குள்ள மக்கள் உடலில் ஏதாவது ஒரு மாற்றம் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்து கொள்கிறார்கள். இதன் மூலம் நோய் இருப்பது முதலிலேயே கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு தேவையான சிகிச்சைகள் மேற்கொண்டு நோயை குணப்படுத்துகின்றர். சிலர் மார்பகங்களை அகற்றவும் ஆபரேசன் செய்து கொள்கிறார்கள். இதனால் அங்கு இறப்பு சதவீதம் குறைகிறது.

தேவை விழிப்புணர்வு

இந்தியாவில் முறையாக நோயாளிகள் பதிவு செய்வதில்லை. இதனால் யாருக்கு என்ன நோய் இருக்கிறது என்று கணக்கிடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் இங்குள்ள பெண்கள் நோய் முற்றி ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற நேரத்தில் தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருத்துவஆலோசனைகள், சிகிச்சை முறைகள் குறித்து தெரிவித்தாலும், அவர்கள் மருத்துவர்கள் சொல்வதை கேட்காமல் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்டு, சிகிச்சை பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர்.

இதுவே இந்தியாவில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவீதம் அதிகரிக்க ஒரு முக்கிய காரணம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+