தமிழ் மொழி வளர்வது நம் கையில்தான் உள்ளது-எஸ்.பி.முத்துராமன்
காரைக்குடி: உலக அளவில் தமிழை சிறந்த மொழியாக்குவது நம் கையில் தான் இருக்கிறது என்று திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழர் மன்றம் சார்பில் 3-வது ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா கடந்த திங்கள்கிழமை அன்று நடந்தது. அதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட இயக்குனர் எஸ். பி. முத்துராமன் பரிசுகள் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது,
தமழர் திருநாளான பொங்கலை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொணாடாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தில் மஞ்சு விரட்டுக் காட்சி வைத்தேன். கமலஹாசனின் சகலகலாவல்லவன் படத்தில் சிலம்பாட்டக் காட்சி வைத்தேன்.
இப்பகுதியைச் சேர்ந்த கவியரசர் கண்ணதாசன் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும்படி பாடல்கள் எழுதினார். ஏவிஎம் மெய்யப்பச்செட்டியார் நாம் இருவர் படத்தின் மூலம் பாரதியார் பாடல்களை உலகம் அறியும்படி செய்தார். கம்பன் கழகம் அமைத்து சிறப்பாகச் செயல்பட்டவர் சா. கணேசன். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் இப்பகுதி வாழ் நகரத்தார்கள் தொடர்புடையது. இபப்டி பலரும் வளர்த்த தமிழை உலக அளவில் சிறந்த மொழியாக்குவது நம் கையில் தான் உள்ளகு என்றார்.
இந்த விழாவில்தமிழர் மன்றத் தலைவர் ச.மீ.ராசகுமார், முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் என். சுந்தரம், கவிஞர் அப்துல் ரகுமான், திரைப்பட நடிகர் சரவணன், திரைப்பட தயாரிப்பாளர் அன்புத்தென்னரசு உள்ளிட்டோர் பேசினர்.
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். மேலும் சிலம்பாட்டம், தீப்பந்தம் சுழட்டுதல், ஒயிலாட்டம், தப்பாட்டம், இளவட்டக்கல் தூக்குதல், வழுக்குமரம் ஏறுதல், உரியடித்தல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டு இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறும் போட்டியில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications