துபாயில் வானலை வளர்தமிழின் கவியரங்கம், சிறப்பிதழ் வெளியீட்டு விழா

இந்த நிகழ்ச்சியில் ஈடிஏ நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் அகமது முகைதீன், வழக்கறிஞர் நந்தகுமார் மற்றும் தமிழ் குடும்பம் முன்னாள் நிர்வாகி ஜெயராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக ஸ்ரீவாணி ஆனந்தன் மற்றும் ஜெயா பழனி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடந்து சிறப்பு விருந்தினர்கள் அகமது முகைதீன், நந்தக்குமார், ஜெயராமன் ஆகியோருக்கு அமைப்பின் சார்பில் காவிரிமைந்தன், ஜியாவுதீன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
தொடர்ந்து "ஈரம்" இதழ் வெளியீட்டில் முதல் மூன்று பிரதிகளை அஹமது முகைதீன், வழக்கறிஞர் நந்தகுமார், ஜெயராமன் ஆகியோர் வெளியிட முறையே புதிய
உறுப்பினர்கள் சண்முகம், செந்தில், ராஜ்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முதலில் பேசிய சிறப்பு விருந்தினர் ஜெயராமன், அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பாராட்டி பேசியதுடன், தொடர்ந்து இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அடுத்து பேசிய அஹமது முகைதீன், ஈரம் தலைப்பை ஒட்டி தான் எழுதிய கவிதையை வாசித்துக்காட்டி கை தட்டல்களை அள்ளிச் சென்றதுடன், பி.பி. ஸ்ரீனிவாஸின் அருமையானஒரு பாடலைப் பாடி அவையோரை அசரவைத்தார்.
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் நந்தகுமார், தாய் அன்பின் ஈரத்தின் வலிமையை பற்றி பேசினார். இவர் வெளிநாட்டில் தடைசெய்யப்பட்ட கசகசா மற்றும் சில மருந்துகளைப் பற்றி அறியாத பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பொதுச்சேவை ஆற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடந்த கவியரங்கு நிகழ்ச்சிக்கு அபுதாபி கவி கலாம் மற்றும் குத்துபுதீன் ஐபக் தலைமை தாங்க, கவிஞர்கள் காவிரிமைந்தன், ஜியாவுதீன், சந்திரசேகர், முகவை முகில், ஜெயராமன் ஆனந்தி, முகவை காளிதாஸ் மற்றும் தஞ்சாவூரான் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதேநிறைவுற்றது.
தொடர்ச்சியாக சென்றமாதம் இறையடி சேர்ந்த அமைப்பின் இணை செயலாளரும், தமிழ்த்தேர் இதழின் பொறுப்பாசிரியருமான ஜியாவுதீனின் தாயார் மறைவிற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியை ஆலோசகர் காவிரிமைந்தன் தொகுத்து வழங்க, பொது செயலாளர் சிம்மபாரதி நன்றியுரையாற்றினார்.
காவிரிமைந்தன், ஆனந்தன், சிம்மபாரதி, ஜியாவுதீன் மற்றும் தஞ்சாவூரான் ஆகியோர் இந்த நிகழச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications