திருச்செந்தூர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா 13 தேதி தொடக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 13ம் தேதி திங்கங்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக திருச்செந்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்டிஓ பொற்கொடி தலைமை தாங்கினார்.
திருச்செந்தூர் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வைகாசி விசாக திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக முக்கிய நகரங்களில் இருந்து 100 சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படு்ம் என்றும், கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications