குலசேகரபட்டிணம் தசரா விழா இன்று துவக்கம்: அக்டோபர் 6ல் சூரசம்ஹாரம்
உடன்குடி: குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழா வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடக்கிறது.
இந்தியாவி்ல் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று தொடங்கியது. இந்த திருவிழா வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடக்கிறது.
இன்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பாட்டம் வீதி உலாவும், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. பின்பு 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
இதில் அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், இணை ஆணையர் புகழேந்திரன் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன், துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தசரா திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் விசுவகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதிகிருஷ்ணன், மகிசாசுரமர்த்தினி, அனந்த நடராஜர், கஜலெட்சுமி, கலைமகள் போன்ற திருக்கோலங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
10-ம் நாள் திருவிழாவான வருகி்ற 6-ம் தேதி இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்நது 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு முன்பு எழுந்தருளுகிறார். பின்னர் கடற்கரையில் மகிசாசுரமர்த்தினி, மகிசாசூரனை வதம் செய்யும் மகிசா சூரசம்ஹாரம் நடைபெறும். அதன் பின்னர் சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications