திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: இலவச தரிசனத்திற்கு 11 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் 11 மணி நேரம் காத்திருந்து இலவச தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் உலக புகழ் பெற்றது. இதனால் அங்கு எப்பொதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டத்திற்கு சொல்லவே வேண்டியதில்லை.
நேற்று வார இறுதி நாள் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகள் நிரம்பிவிட்டதால் பலரும் அருகில் உள்ள பூங்காக்களிலும், சாலையோரங்களிலும் தங்கினர்.
கோவிலின் வைகுண்டம் கியூ காம்பிளக்ஸின் 31 கம்பார்ட்மெண்ட்களும் நிரம்பியது. இதை தவிர கோவில் வெளியே சுமார் 1 கிமீ தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனம் செய்ய பகதர்கள் 11 மணி நேரம் காத்திருந்தனர். ரூ. 300, ரூ. 50 கட்டண தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருந்தனர்.
தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு இலவச உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டன. கூட்டம் அதிகமாக இருந்ததால் மகாலகு தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications