களக்காடு மலைப் பகுதியில் 50 பேர் தங்கும் பிரமாண்ட குகை கண்டுபிடிப்பு
களக்காடு: களக்காடு மலையில் பிரமாண்ட குகை இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் ஒரே நேரத்தில் 50 பேர் தங்கும் இடவசதி உள்ளது.
களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், காட்டெருமைகள், மான் வகைகள், சிங்கவால் குரங்கு உளளிட்ட அரிய வகை விலங்குகள் உள்ளன. வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் காண்காணிக்க வனப்பகுதியில் 8 இடங்களில் டிஜிட்டல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராவில் புலிகள், சிறுத்தைகள், காட்டு பூனைகளின் படங்கள் பதிவாகியுள்ளன. இதுபோல மலை இடுக்குகளில் குகைகளும் காணப்படுகின்றன. அதில் செங்கல்தேரி மலையில் காணப்படும் குகை பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கடல மட்டத்தில் இருந்து 1000 அடி உயரம் கொண்ட செங்கல்தேரி பள்ளத்தாக்கில் இருந்து 3 கிமீ தொலைவில் கருமண்டி அம்மன் கோவில் உள்ளது. கோவில் அருகே பெரிய பாறை உள்ளது.
பாறை இடுக்கின் வழியாக உள்ளே சென்றால் பிரமாண்ட குகை உள்ளது. குகையின் உள்பகுதி வீடுகளைப் போல நீளமாகவும், அகலமாகவும் உள்ளது. ஒரே நேரத்தில் 50 பேர் வரை தங்கும் வகையில் இடவசதி உள்ளது. மழை பெய்தால் கூட தண்ணீர் துளிகள் குகைக்குள் விழுவதில்லை. குகையின் நுழைவு வாயில் சிறியதாக இருப்பதால் குனிந்து தான் செல்ல முடியும். முன் காலத்தில் இதுபோன்ற குகைக்குளில் சித்தர்கள் தங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications