சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு சிறப்பு ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சிறப்பு ரயிலுடன் கூடிய பயண திட்டத்தை பக்தர்களுக்கு அளிக்கிறது.

இதுகுறித்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் வெளியிட்டு செய்திக்குறிப்பில், "ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பல பக்தர்கள் இடம் கிடைக்காமல் நெரிசலில் பயணித்து கடும் சிரமத்தோடு சென்று வருகின்றனர்.

இதனை தவிர்க்க இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) சார்பில் நவம்பர் மாதம் 21, 24, டிசம்பர் மாதம் 1,5,15, 19, 22 மற்றும் ஜனவரி மாதம் 5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு 1,890 ரூபாய் கட்டணத்தில், 2ம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் கோட்டயம்-நிலக்கல் சென்று வர வாகன வசதி ஆகியவை செய்து தரப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி முன்பதிவு மையத்தை தொடர்பு கொள்ளலாம்," என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+