பௌர்ணமி வெளிச்சத்தில் மிண்ணிய தாஜ்மஹால்

உத்தர பிரதேச மாநிலத்தில் யமுனா நதிக்கரையில் இருக்கிறது தாஜ்மஹால். சாதாரணமாக அதைப் பார்த்தாலே அடடா என்ன அற்புதம் என்று புகழ்வார்கள். பௌர்ணமி நிலவொளியில் அந்த பளிங்கு மாளிகை மிண்ணும்போது பார்த்தால் சொல்லவா வேண்டாம். அந்த அழகைப் பார்க்க கோடி கண் வேண்டும்.
நேற்று முன்தினம் பௌர்ணமி நாள் என்பதால் தாஜ் மஹால் நள்ளிரவு வரை திறந்திருந்தது. தாஜ் மஹாலின் அழகை இரவு நேரத்தில் அதுவும் பௌர்ணமி வெளிச்சத்தில் கண்டு ரசித்து மயங்க சுமார் 350 பேர் வந்திருந்தனர். அதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் அடக்கம். பௌர்ணமி வந்தால் தாஜ் மஹாலிடம் மனதைப் பறிகொடுக்க தீபிகா அங்கு சென்றுவிடுவார்.
நேற்று முன்தினம் இரவு தந்தை பிரகாஷ் படுகோனே உள்ளிட்ட 4 பேருடன் வந்திருந்தார். சில்லென்ற தென்றல் இதமாக வீச அனைவரும் தாஜ் மஹாலின் அழகில் லயித்திருந்தனர். அதைப் பார்க்கையில் கவிதை எழுதத் தெரியாதவர்களுக்கும் கூட கவிதை சொல்லத் தோன்றும்.
இது குறித்து அந்த காட்சியை நேரில் கண்டவர்கள் கூறியதாவது,
நிலா மிகவும் பிரகாசமாக இருந்தது. நல்ல வேளை மேக மூட்டம் வந்து நிலவை மறைக்கவில்லை. கடந்த 2 நாட்களாக படு சூடாக இருந்தது. ஆனால் இன்று குளிர்ச்சியாக உள்ளது. கொஞ்சம் மழை பெய்தால் தாஜ் மஹால் தூசியின்றி இன்னும் அழகாக இருக்கும். மழை பெய்தால் தாஜ் மஹால் பளிச்சென்று இருக்கும். அப்போது நிலா வெளிச்சம் அதில் படும்போது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
நிலா வெளிச்சம் பட்டவுடன் ஒவ்வொரு பளிங்கும் மிண்ணியது. அதைப் பார்த்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications