அபுதாபியில் மாத்துல் பஞ்சாயத்து கே.எம்.சி.சி துவக்கம்: வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் பங்கேற்பு

தொடர்ந்து இந்தியன் இஸ்லாமிக் சென்டர் ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உரையை கேட்க திரளான மக்கள் கூடியிருந்தனர்.
அப்துல் ரஹ்மான் எம்.பி. தனது உரையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு கேரள மாநிலம் ஆற்றி வரும் மகத்தான சேவைகளையும்,அதன் தலைவர்களையும் பெருமையோடு நினைவு கூர்ந்தார். கேரள மாநில முஸ்லிம் லீக்கின் ஆதரவினால் இந்தியா முழுவதற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஏணிச் சின்னம் கிடைத்ததை சுட்டி காட்டியபோது அரங்கமே கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்க்கிணங்க தமிழிலும் சில நிமிடங்கள் பேசி தனது உரையை முடித்தார்.
கேரள சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ரண்டதானி பேசும்போது, தமிழ்நாடு முஸ்லிம் லீக்கின் பெருமையையும், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்களின் அரசியல் அணுகுமுறை,அவரின் அறிவாற்றல்மிக்க பேச்சுத் திறனையும் சிலாகித்துப் பேசினார்.தொடர்ந்து கேரள அரசியல் நிலவரங்களையும்,கே.எம்.சி.சி.யின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமாக மலையாளத்தில் உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா,பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான், அமைப்புச் செயளாலர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான், ஊடகத்துறைச் செயலாளர் கும்பகோணம் சாதிக் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
நிகழ்ச்சியில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் துபாய் மண்டலச் செயளாலர் முதுவை ஹிதாயத், கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் ஹபீபுல்லாஹ், மக்கள் தொடர்பு செயலாளர் கீழை ஏ.ஹமீது யாஸின், ஃபுஜைரா மண்டலச் செயலாளர் வழுத்தூர் ஜெ.முஹையத்தீன் பாட்ஷா, ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யத்தீன், ஆடிட்டர் கீழக்கரை ஹமீத் பக்ஷ் யூசுப், தேவிபட்டினம் நிஜாம் அக்பர், அபுதாபி அய்மான் சங்க பொதுச் செயளாலர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது, துணை தலைவர் ஹாஜி குத்துபுதீன், பொருளாளர் கீழை ஜமால்,செயலாளர் திருவாடுதுறை அன்சாரி பாஷா,முத்துப்பேட்டை முஹைதீன் சாஹிப் உள்ளிட்ட நிர்வாகிகளும், சமுதாய ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications