30ல் நடந்த 'குவைத் தமிழ்' மாத இதழின் 7ம் ஆண்டு துவக்க விழா

குவைத் தமிழ் பத்திரிக்கையின் ஆலோசகர் நாசர் ரப்பானி அவர்கள் கிராஆத் ஒதி விழாவை துவக்கி வைத்தார். தமிழ் பத்திரிக்கை நிறுவனர் கே. லுக்மான் சித்திக் வரவேற்புரையாற்றினார்.
கருத்துரை வழங்கிய கம்பளி பஷீர் அவர்கள் இப்பத்திரிக்கையின் தொடர் வளர்ச்சிக்கு வர்த்தகர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, குடிசைகள் எப்போது கோபுரங்களாகும்? (கவிதைகள்) எனும் நூலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சங்கரி நாரயணன் வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்களான டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி., பேராசிரியர் அப்துல்லாஹ், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோருக்கு பத்திரிக்கையின் இணையாசிரியர் அறிவிகவிஞர் ஆனந்தரவி அவர்கள் பிரதிகளை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
பத்திரிக்கை ஆசிரியர் ஏ.அப்துல்கனி (ஜானி) அவர்கள் அழைப்பு விடுக்க “சமூக புரட்சி ” என்ற தலைப்பில் சங்கரி நாரயணனன் விளக்க உரையாற்றினார்
இதையடுத்து வெளியிடப்பட்ட குவைத் தமிழ் பத்திரிக்கையினை டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து வர்த்தக பெருமக்களுக்கும், ஸ்பான்சர்களுக்கும் நினைவு பேழைகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
கம்பளி ஏ.எம். பஷீருக்கு “தொண்டுச் செம்மல்” எனும் பட்டத்தையும், அதற்கான நினைவு பேழையையும் இளங்கோவன் மற்றும் டாக்டர் அப்துல்லாஹ் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
தொடர்ந்து “இயக்கங்கள்” என்ற தலைப்பில் இளங்கோவன் சிறைப்புரையாற்றினார். “தொலைகாட்சி ஊடகம் இன்றைய நிலையில் அவசியமா?” என்ற தலைப்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பேருரையாற்றினார்.
முன்னதாக காரைக்கால் எஸ்.எம். ஆஃரிப் மரைக்காயர் அவர்கள் விழாவுக்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதனை தொடர்ந்து மக்கள் தொடர்பாளர் எம்.செளக்கத் அலி அழைக்க “ஒற்றுமை” எனும் தலைப்பில் பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் நீண்ட நிறைவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியினை விட்டுக்கட்டி எம்.எஸ்.எச். மஸ்தான் அவர்கள் தொகுத்து வழங்கினார். எம்.எம். ஆஃரிப் மரைக்காயர் அவர்கள் ஊடகச் செய்தி வெளீயிடு மற்றும் புகைப்படத் தொகுப்புக்கு பெரிதும் உதவினார்.
இந்த விழாவில் மார்க்க மற்றும் சமுதாயநல அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள், வர்த்தக பெருமக்கள், சமூக நல ஆர்வலர்கள், பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications