ரிலாக்ஸ் ப்ளீஸ் ...!

இமயம் கூட உனக்கு மட்டம்தான்
என்ன நடந்தது இப்போது
எல்லாம் உன் கால் தூசுக்குக் கீழ்
தைரியம் உன் ரத்தமன்றோ
துடைத்துப் போடு துயரத்தை
துணிவுடன் அணுகு
வந்த துயரத்தை வாசலிலேயே பிடித்து நிறுத்து
வசந்தமாக உணர்
எல்லாமே ஓடிப் போகும் உன் முன்பு!
ஒவ்வொரு துயரத்தையும், சோகத்தையும், வலியையும் துடைத்துப் போட நமக்கு உதவுவது மன தைரியம்தான். என்னதான் நடந்தாலும் தைரியமாக இருந்து அதை சந்திக்க வேண்டும். மனதை திடமாக வைத்துக் கொண்டு பிரச்சினையை அணுக வேண்டும்.
சோகத்தில் இருப்பவர்களிடம், துயரத்தில் இருப்பவர்களிடம் நான் இருக்கிறேன் உனக்கு, இதெல்லாம் என்ன பெரிய பிரச்சினை, தைரியமாக அணுகு, எல்லாம் சரியாய்ப் போகும் என்று சொல்லுங்கள், அது அவருக்கு ஆயிரம் யானை பலத்தைக் கொடுக்கும்.
கவலையில் இருப்பவர்களிடம் அருகில் அமர்ந்து பேசுங்கள். ஆதரவாக நாலு வார்த்தை பேசுங்கள். அவரது கவலைகளில், கஷ்டத்தில் பங்கு கொள்ளுங்கள், நான் இருக்கிறேன் செல்லமே என்று ஆறுதலாக சொல்லுங்கள். முடிந்தவரை அவருக்குத் துணையாக இருங்கள். ஆறுதல் சொல்வதை விட ஆறுதலாக இருப்பதுதான் மிகச் சிறந்தது. நான் இருக்கிறேன் உனக்கு என்று அவருக்கு உணர்த்துங்கள். அதிலேயே பாதி துயரம் பறந்தோடி விடும்.
வார்த்தைகளை விட நல்ல ஆறுதல் தரும் மருந்து உலகில் எதுவுமே இல்லை. உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு கஷ்டம் என்றால் அது உங்களுக்கும் கஷ்டம்தான்.இப்படிப்பட்ட நேரத்தில் அவருடன் அணுசரணையாக நாலு வார்த்தை பேசுங்கள். அந்த ஆறுதல் வார்த்தைகள் அவரது மனதுக்கு மருந்தாக அமையும், இதமாக அமையும், ரிலாக்ஸ் செய்ய உதவும்.
கவலைப்படாதே
உன் கைகள் தனியாக இல்லை
என் கரம் கோர்த்தே இருக்கிறது
உன் துயரம் உனக்கு மட்டுமல்ல
நானும் அதில் பங்கு கொள்கிறேன்
கண்ணீரைத் துடைத்துப் போடு
கவலையை இறக்கி வை
தைரியத்துடன் எதையும் சந்தி
எல்லாம் கலைந்து போகும்
எல்லாம் சரியாகும்
வாழ்க்கை அழகானது
அவ்வப்போது அதில் நிழல் படிவது சகஜம்தான்
நிமிர்ந்து நின்று அதை எதிர்கொள்
உன் சிரிப்பால் சுற்றியுள்ளவர்களை குஷிப்படுத்து
என் ஆதரவுக் கரம்
உன் தலை தடவி ஆறுதல் சொல்லும்- எப்போதும்.
தலை தொட்டு, தோளோடு தோள் நின்று, உதவிக் கரமாக உங்களையே கொடுக்கும்போது கிடைக்கும் சுகம் அது பரமானந்தத்திற்குச் சமம். வலிக்கும் இதயங்களுக்கு உங்களது ஆறுதல் வார்த்தைகள் களிம்பாக மாறு்போது கிடைக்கும் இன்பத்திற்கு இணையே கிடையாது.
பிறகென்ன, துயரத்தைத் தூக்கிப் போட்டு ஜம்மென்று இருங்கள்.. எல்லாம் சரியாயப் போகும்!
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications