விலங்குகளை காக்க 'ரத்தக்' குளியல்!

இந்த நிகழ்ச்சியின்போது எப்படி மார்பகங்களைப் பரிசோதிப்பது என்ற வீடியோவையும் தன்னை வைத்து எடுத்தார். மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்தில் இணைந்து செயல்பட விரும்புவதாக அவர் கூறியிருந்தார்.
இப்போது இன்னொரு பரபரப்பை அரங்கேற்றியுள்ளார் ரோஸ்லி. இந்த முறை பேட்டா எனப்படும் விலங்குகள் நல அமைப்புக்காக ரத்த நிறம் கலந்த தண்ணீரில் குளியல் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அழகு சாதனப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புக்காக கினி பிக் எனப்படும் எலியைக் கொன்று வருவதை எதிர்த்து இந்த ரத்தக் குளியலை நடத்தியுள்ளார் ரோஸ்லின்.
இதுகுறித்து ரோஸ்லின் கூறுகையில், விலங்குகளைக் கொன்று பல்வேறு சோதனைகளை நடத்துகிறார்கள். பல பொருட்களைத் தயாரிக்கிறார்கள். இது கொடூரமானது மட்டுமல்ல, இரக்கமற்றதும் கூட. எலிகள், முயல்கள் உள்ளிட்டவற்றைக் கொன்று அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
ரோஸ்லின் இப்படி அதிரிபுதிரியாக எதையாவது செய்யப் போய் தற்போது அது அவருக்கு நல்லதாகவும் அமைந்துள்ளதாம். அதாவது தமால் செளகடி என்ற புதிய இந்திப் படத்தில் இவரை நடிக்கக் கூப்பிட்டுள்ளனராம்.
ரோஸ்லின் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!












Click it and Unblock the Notifications