திருச்செந்தூரில் நாளை தைப்பூசத் திருவிழா: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை தைப்பூச திருவிழா கோலாகலமாக நடக்கவிருக்கின்றது. இதை முன்னிட்டு பாதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. காலை 8 மணிக்கு அஸ்திரதேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
உச்சிகால தீபாராதனைக்கு பிறகு சுவாமி அலைவாயுகாத்த பெருமாள் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தை அடைகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உள்மாட வீதிகளில் உலா வந்து கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
தைப்பூசத்தை முன்னி்ட்டு நெல்லை, பாபநாசம், விகேபுரம், பாவூர்சத்திரம், தூத்துக்குடி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து அழகு குத்தியும், காவடி ஏந்தியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications