ரூ.100 கோடியில், 222 அடியில் பீகாரில் உலகின் மிகப்பெரிய கோவில் கட்டப்படுகிறது

12வது நூற்றாண்டில் கம்போடியாவில் கட்டப்பட்டது இந்த அங்கோர் வாட் கோவில். தற்போது இதை விட பெரிதாக கட்டப்படும் கோவில், பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் கட்டுகின்றனர்.
இது குறித்து பீகார் மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் செயலாளரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான ஆச்சார்யா கிஷோர் குணால் கூறியதாவது,
இஸ்மாயில்பூர் அருகே...
இந்த புதிய கோவில் 15 ஏக்கர் நிலத்தில் ரூ.100 கோடி செலவில் கட்டப்படுகிறது. 222 அடி உயரத்திற்கு கட்டப்படும் இது 5 அடுக்குகளை கொண்டதாக இருக்கும். இது ஹாஜிபூர்-பிடுபூர் ரோட்டில் உள்ள இஸ்மாயில்பூர் கிராமம் அருகே உள்ள இடத்தில் கட்டப்படுகிறது. கோவில் அமையும் இடத்திற்கு அங்கோர் நகர் என்று பெயரிடப்படுகிறது.
இதற்காக உள்ளூர்வாசிகளிடம் இருந்து சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள நிலம் வாங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு விராத் அங்கோர் வாட் ராம் மந்திர் என்று பெயரிடப்படும். இந்த கோவிலில் ராதா-கிருஷ்ணா, சிவன்-பார்வதி, கணேஷ், சூர்யா, விஷ்ணு மற்றும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் சிலைகள் ஆகியவை வைக்கப்படும். இதை கட்டி முடிக்க 5 ஆண்டுகளும், அழகுபடுத்த மேலும் 5 ஆண்டுகளும் ஆகும்.
இந்த கோவிலுக்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமத்திற்கு ராமர், லக்ஷ்மணர் மற்றும் விஸ்வாமித்திரர் ஆகியோர் வந்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. பீகார் மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த கோவில் கட்டப்படுகிறது என்றார்.
12வது நூற்றாண்டில் கம்போடிய மன்னர் சூர்யவர்மன் கட்டிய அங்கோர் வாட் தான் இது வரை உலகின் மிகப் பெரிய இந்து கோவிலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications