துபாயில் தமிழ்த்துளி அமைப்பு நடத்திய பொங்கல் விழா

விழாவுக்கு தமிழ்த்துளி அமைப்பின் தலைவி பிரியா ராஜன் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், தமிழ்த்துளி அமைப்பு குழந்தைகள் தமிழ் மொழியில் பேச வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அமைப்பு. பெற்றோர்கள் இந்த நோக்கம் நிறைவேற முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பாலாஜி பாஸ்கரன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்துளி அமைப்பின் சேவைகளை நினைவு கூறும் வண்ணம் விருதை மு. செய்யது ஹுசைன் பாடிய பாடல் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.
சிறப்பு விருந்தினராக ஜெயா தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரும், குழந்தைகளின் திறன்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சியளித்து வரும் ரஃபீக் சுலைமான் பங்கேற்றார். அவர் தனது சிறப்புரையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் எத்தகைய துறையில் ஆர்வம் கொண்டுள்ளார்களோ அத்தகைய துறையில் அவர்களது கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் வாழ்வில் உயர்நிலையை அடைந்து வெற்றியாளராக வலம் வருவர் என்பதில் சந்தேகமில்லை என்பதனை எடுத்துக்காட்டுடன் விவரித்தார்.
அமெரிக்க அதிபரின் மனைவிக்கு உடைகளை வடிவமைப்பவர் தைவான் நாட்டைச் சேர்ந்த 27 வயது இளைஞர். அவர் தனது இளம் வயதில் பேஷன் டிசைனில் ஆர்வமுடன் இருந்ததை அறிந்து அவரது பெற்றோர் அதனைப் படிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த காரணத்தினால் உயர்நிலையினை அடைந்துள்ளார்.
தொடர்ந்து விருதை மு. செய்யது ஹுசைன், முதுவை ஹிதாயத், ரஃபீக் சுலைமான் ஆகியோருக்கு பிரியா, பிரசன்னா, ரமணி ஆகியோர் பூங்கொத்து வழங்கி கௌரவித்தனர்.
குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கல், மாட்டுப் பொங்கல் உள்ளிட்டவை குறித்த தகவல்களை பாவை நியாஸ் வழங்கினார். விரைவில் உறுப்பினர்களுக்கான சிறப்பு சுற்றுலா ஒன்றும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மாயா தமிழ்ச் செல்வன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரியா, ரமணி, பாலாஜி பாஸ்கரன், பாவை நியாஸ், மாயா தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications