மஸ்கட்டில் தேவா வெளியிட சச்சு பெற்றுக்கொண்ட 'பாலைப் பூக்கள்'
Subscribe to Oneindia Tamil

மஸ்கட் அல்பலஜ் கலையரங்கில் தமிழ்ச் சங்கம் சார்பில் மயக்கும் மண்வாசனை என்ற கிராமிய கலை விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட். மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்' என்ற கவிதை நூலை பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா வெளியிட்டார்.
புத்தகத்தை தேவா வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க கலாச்சார, இலக்கியச் செயலராக செயல்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications