துபாய் அமைப்பு நடத்தும் உலகளாவியக் கவிதைப் போட்டி: முதல் பரிசு 4 கிராம் தங்கக்காசு
துபாய்: துபாய் தமிழர் சங்கமம் உலக அளவிலான கவிதைப் போட்டியை நடத்துகிறது.
உலகளவில் பரவிக்கிடக்கும் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்காகவும் அதன் மூலம் நல்லதொரு படைப்புகளைத் தமிழ் உணர்வாளர்களுக்கு விருந்துப் படைபதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் துபாய் தமிழர் சங்கமம் அமைப்பு உலகளாவியக் கவிதைப்போட்டியை நடத்தி வருகிறது என அதன் இலக்கியப் பிரிவு செயலாளர் அதிரை கவியன்பன் கலாம் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் கவிஞர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் [email protected]
போட்டி விபரங்கள் வருமாறு,
விருப்புத் தலைப்பில் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 25.09.2014
முதல் சுற்று
விருப்புத் தலைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்குபெறுவார்கள். படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 23.10.2014 ஆகும்.
தலைப்பு 25.10.2014 அன்று அறிவிக்கப்படும்
இரண்டாம் சுற்று
முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்குபெறுவார்கள். படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி 27.11.2014 ஆகும்.
தலைப்பு 29.11.2014 அன்று அறிவிக்கப்படும்
இறுதிச் சுற்று
இரண்டாம் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்குபெறுவார்கள்.படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 31.12.2014 ஆகும்.
தலைப்பு 25.10.2014 அன்று அறிவிக்கப்படும்
முடிவு அறிவிப்பு மற்றும் பரிசு வழங்குதல்:
பொங்கல் திருநாள் அன்று இறுதிச் சுற்றில் பங்குபெற்ற 10 படைப்பாளிகளிலிருந்து மூவர் மட்டுமே தேர்ந்தேடுக்கப்படுவார்கள்
முதல் பரிசு: 4 கிராம் தங்கக் காசுகள்
வழங்குபவர்: எக்ஸலன்ட் முருகேஷ் - டாக்டர் சுமதி தம்பதியினர், நிறுவனர், தமிழர் சங்கமம்
இரண்டாம் பரிசு: 2 கிராம் தங்கக் காசுகள்
வழங்குபவர்: அட்மின் கமிட்டி உறுப்பினர்கள், தொழிற்பிரிவு, தமிழர் சங்கமம்
மூன்றாம் பரிசு : 1 கிராம் தங்கக் காசு
வழங்குபவர்: கவியன்பன் கலாம், கலை இலக்கியப் பிரிவு செயலாளர், தமிழர் சங்கமம்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications