For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபெட்னா 2017- தமிழர்களுக்கு விருந்துபடைக்க மிரட்டல் வடிவத்தில் ' மருதநாயகம் மரபு நாடகம்'

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் சேர்ந்து நடத்தும் ஃபெட்னா 2017 திருவிழாவில் வரலாற்று பெருமைகொண்ட 'மருதநாயகம் மரபு நாடகம்' தமிழ் நெஞ்சங்களை கொள்ளையடிக்க தயாராகவு

By Devarajan
Google Oneindia Tamil News

மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30 வது பேரவைத் 'தமிழ் விழா' அமெரிக்காவின் மினசோட்டா நகரின் மினபொலிஸ் கன்வென்சன் சென்டரில் இம்மாதம் 30 ம் தேதி தொடங்குகிறது.

உலகத்தமிழர்கள் சங்கமிக்கும் இந்தவிழாவில், தமிழர் மத்தியில் தொன்றுதொட்டு பாதுகாக்கப்பட்டு வரும் பண்பாட்டு விழுமியங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மரபுசார் சிறப்புகளை உலகிற்கு வெளிப்படுத்தும்வகையில் தமிழ்க் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செம்மையாகச் செய்யப்பட்டுள்ளன.

FeTNA 2017: 'Marutha nayagam' Tamil Drama will Perform on coming July 1st

அதில் மிக முக்கியமானது 'மருத நாயகம் மரபு நாடகம்' . மருதநாயகம் என்ற சொல் தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத சொல். இதன் பின்னே உள்ள அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றை பொய்மையின்றி மெய்மை மெருகேற்றி வடிவமைத்துள்ளார் பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜூ.

பேரவை தமிழ்த் திருவிழா ஜூன் மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. அடுத்த நாளான ஜூலை 1ம் தேதி 'மருத நாயகம்' மரபு நாடகம் மேடையேறுகிறது. இதற்கு இசை அமைத்து வடிவம் கொடுத்துள்ளார் முருகவேல். கதை மூலம் பேராசிரியர் நா.வானமாமலை.

English summary
FeTNA 2017: 'Marutha nayagam' a traditional Tamil Drama will Perform on coming July 1st at north america Minnesota city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X